ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் சீனுராமசாமியின் திரைப்படம்!

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள கோழிப் பண்ணை செல்லதுரை திரைப்படம் அமெரிக்காவில் நடைபெறும் ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படுகிறது.

Aug 30, 2024 - 12:34
Aug 30, 2024 - 13:26
ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் சீனுராமசாமியின் திரைப்படம்!
ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் சீனுராமசாமியின் திரைப்படம்!

தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமாணே உள்ளிட்ட பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் சீனி ராமசாமி. இவரது இரண்டாம் திரைப்படமான தென்மேற்கு பருவக்காற்று, தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. இதைத் தொடர்ந்து வெளியான நீர்பறவை திரைப்படமும் சினிமா விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து வெளியான தர்மதுரை திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனை அடித்து நொறுக்கியது என்றே கூறலாம். திரைக்கதை, கதை ஓட்டம், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், தமன்னா ஆகியோரது நடிப்பு ரசிகர்களைக் கட்டிப்போட்டது என்றே கூறலாம். இப்படத்திற்காக அவர் சிறந்த இயக்குநர் என்ற விருது பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சீனுராமசாமி தற்போது ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இதில் அறிமுக நாயகன் ஏகன், யோகிபாபு, சகாயபிரிகிடா, லியோ சிவகுமார், ஐஸ்வர்யா தத்தா, சத்யாதேவி, குட்டிப்புலி  தினேஷ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர் அருளானந்து தயாரித்த இப்படத்திற்கு என். ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். மேலும் வைரமுத்து, பா விஜய் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. தற்போது இந்த கோழிப் பண்ணை செல்லதுரை திரைப்படம் அமெரிக்காவில் நடைபெறும் ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படுகிறது. செப்டம்பர் 12 முதல் 21 வரை நடைபெறும்  இத்திருவிழாவில் 18ம் தேதி இரவு 8.00 மணிக்கு கோழிப்பண்ணை செல்லதுரை ‘வோர்ல்டு ப்ரீமியர்’ அந்தஸ்தில் திரையிடப்படுகிறது.

மேலும் படிக்க: மின்னல் முரளி ஹீரோ டோவினோ தாமஸின் 50வது படம “ஏஆர்எம்”.. அதிரடியான டிரெய்லர் வெளியாகியுள்ளது!

ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் கடந்த 22 வருடங்களில் தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழ்ப் படம் ‘கோழிப் பண்ணை செல்லதுரை’ என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கோழிப் பண்ணை செல்லதுரை திரைப்படம் செப்டம்பர் 20ம் தேதி வெளியாகிற நிலையில், இரு நாள் முன்பாக அமெரிக்காவில் புகழ் வாய்ந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவது பெருமையாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்து  தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow