பாலா 25: நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்த சுரேஷ் காமாட்சி

நெகிழ்ந்த பேரன்பின் நிகழ்வில் இன்னமும் வெளியேறிவிடாமல் அசைவுகள் ஒவ்வொன்றையும் மீண்டும் மீண்டும் நினைவோட்டிக்கொண்டிருக்கிறேன் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

Dec 20, 2024 - 17:30
பாலா 25: நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்த சுரேஷ் காமாட்சி

என் நேசமிகு திரைச் சொந்தங்கள் தந்த பேரன்பு இதயத்தின் அறைகளில் தித்திப்பை ஓடச் செய்து கொண்டிருக்கிறது. அதற்கெல்லாம் காரணமாக என் ஆட்காட்டி விரல் ட்ரேட் சென்டருக்கு வருகை தந்த ஒவ்வொரு பிரபலங்களையும்... நண்பர்களையும்.. பாலா அண்ணனையும் நோக்கியும் சகோதரர் அருண்விஜய்யை நோக்கியும் மட்டுமே திசை காட்டும்.
 
எனக்குத் தோள் கொடுத்த இயக்குநர் ஏ. எல். விஜய், இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் சமுத்திரக்கனி, இயக்குநர் ராம், இயக்குநர் லிங்குசாமி,   ஏசிடிசி நிறுவனத்தின் திரு. ஹேமந்த், சரவணன்,  பாலமுருகன் ஆகியோருக்கும்
 
விழாவிற்கு பௌர்ணமி வெளிச்சம் பூசிய நடிகர் சிவக்குமார், அண்ணன் சீமான், சூர்யா,  சிவகார்த்திகேயன், இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் விக்ரமன், இயக்குநர்  கே பாக்கியராஜ் மற்றும் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம்  மற்றும் அனைத்து சங்கங்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
அரசியல் தரப்பிலிருந்து வாழ்த்து செய்தி தந்த  எடப்பாடி கே. பழனிசாமி, அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ், வேல் முருகன், தமீம் அன்சாரி, தனியரசு ஆகியோருக்கும் என் நன்றிகள் 
 
அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் அன்புக் கடிதத்திற்கு நன்றி. மேலும், வெளியூரிலிருந்து வந்து கலந்து கொண்ட நடிகைகளுக்கும் என் நன்றிகள். 
 
வருகை தந்த நடிகர்கள் நடிகைகள் தயாரிப்பாளர்கள்... இயக்குநர்கள்... தொழில்நுட்பக் கலைஞர்கள், தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன், பத்திரிகையாளர்கள் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் பேரன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கிறேன்.
 
தனிப்பட்ட முறையில் வருகை தந்த அனைவருக்கும் இந்தக் கடிதத்தின் சுருக்கம் கருதி சொல்ல இயலவில்லை. அனைவரையும் அழைத்துப் பகிர்ந்துகொள்கிறேன். மேடையில் பாடி ஆடி மகிழ்வித்த திறமைக் கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றியும் அன்பும்.
 
அண்ணன் பாலாவின் 25 ஆம் ஆண்டு கலைப்பயணம் மற்றும் வணங்கான் ஆடியோ வெளியீட்டிற்காக உழைத்த சொந்தங்கள் பந்தங்கள் அனைவருக்கும் நன்றி என்று தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow