ஸ்டாலின் பேச்சின் பின்னணி இப்போ தான் புரியுது... சண்முகம் சாடல்..!

“விரைவில் தேர்தல் வரும், ஆட்சி மாற்றம் வரும்” என திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதற்கான பின்னணி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Jul 2, 2026 - 18:30
ஸ்டாலின் பேச்சின் பின்னணி இப்போ தான் புரியுது... சண்முகம் சாடல்..!

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், ”திமுக ஆட்சியில் இல்லாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பதாகவும், தமிழக மக்கள் வழங்கிய ஆட்சி மாற்றத் தீர்ப்பை அக்கட்சி மதிக்க மறுப்பதாகவும் குற்றம்சாட்டினார். அதனால்தான் குதிரை பேரம்’, ‘கழுதை பேரம்போன்ற செயல்களில் திமுக ஈடுபடுகிறது. தவெக ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து, மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த முயற்சிகள் நடைபெறுகின்றன. சில நாட்களுக்கு முன்பு ஸ்டாலின் பேசிய ஆட்சி மாற்றம் குறித்த கருத்தின் பின்னணி இப்போது தான் புரிகிறதுஎன்றார். 

தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக முன்வந்து ஒரு கட்சியில் இருந்து விலகி மற்றொரு கட்சியில் சேர்வது அரசியலில் இயல்பான ஒன்று. ஆனால், கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து ஒருவரை வாங்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது. இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று சண்முகம் வலியுறுத்தினார்.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow