திமுக Vs த்ரிஷா நற்பணி மன்றம்… வைரலாகும் போஸ்டர் போட்டி..!
பெண்கள் நம் நாட்டின் கண்கள் Vs அநீதி வீழும் அறம் வெல்லும் என திமுக Vs திரிஷா நற்பணி மன்றத்தினர் இடையேயான போஸ்டர் போட்டி இணையத்தில் வைரலாகியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நடிகை திரிஷா குறித்தும் முதலமைச்சர் விஜய் குறித்தும் இரட்டை அர்த்தத்தில் பேசிய விவகாரம் கைது என நாடு முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பெண்கள் நம் நாட்டின் கண்கள் Vs அநீதி வீழும் அறம் வெல்லும் என திமுக Vs திரிஷா நற்பணி மன்றத்தினர் மதுரையில் மாறி மாறி போஸ்டர் ஓட்டியுள்ளனர்
மதுரை மாவட்டம் திரிஷா நற்பணி மன்றம் (தலைமையகம்) சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கடும் கண்டனம் எனவும், பெண்களின் பெயரை பயன்படுத்தி நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்தத்தில் பேசி அவமதித்தால் ஏற்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எங்கள் அன்பு அக்கா திரிஷா அவர்களைப்பற்றி யார் தவறாக பேசினாலும் எங்களால் ஏற்க முடியாது என்றும், மீறினால் மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்ய நேரிடும் பெண்கள் நம் நாட்டின் கண்கள் என அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதத்தில் மதுரை மாவட்ட திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினின் கைதை கண்டித்து அநீதி விழும் அறம் வெல்லும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
மதுரையில் திமுக மற்றும் திரிஷா நற்பணி மன்றத்தினர் இடையே போஸ்டர் போட்டி தொடங்கும் வகையில் மாநகர் முழுவதிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
What's Your Reaction?

