கல்வி நிதியை குறைத்த தவெக? பிரியாணிலாம் கிடையாது பசங்களா..!

2026 – 2027 நிதியாண்டுக்கான பட்ஜெட் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கல்விக்கான நிதியை தவெக அரசு குறைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Aug 5, 2026 - 14:44
கல்வி நிதியை குறைத்த தவெக? பிரியாணிலாம் கிடையாது பசங்களா..!

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் தற்போது தமிழ்நாட்டின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான முதல் நிதிநிலை அறிக்கையை இன்று(ஆகஸ்ட் 05) நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் தாக்கலில் ஏராளமான திட்டங்களும் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடும் பற்றி விரிவாக விவரிக்கப்பட்டது. அதில் முக்கிய அறிவிப்பாக, பள்ளிக்கல்வித்துறைக்கு ஏராளமான அறிவிப்புகள் வெளியானது.

கடந்த நிதியாண்டில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, பள்ளி கல்விக்காக ரூ.46,767 கோடியை ஒதுக்கியிருந்த நிலையில், இன்று தவெக பட்ஜெட்டில் அமைச்சர் மரிய வில்சன், பள்ளி கல்விக்கு 44,523 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். இந்தாண்டு கல்விக்கான நிதியானது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது ரூ.2,244 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் உயர்கல்வியிலும் நிதி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு ரூ.8,494 கோடி திமுக அரசால் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.8,393 ஒதுக்கீடு செய்யப்படுவதாக தவெக அரசு அறிவித்துள்ளது. அதன்படி உயர்கல்வியில் ரூ.101 கோடி குறைக்கப்பட்டிருக்கிறது. இப்படி பள்ளிக்கல்வி மற்று உயர்கல்விக்கான நிதியில்  மொத்தமாக ரூ.2,345 கோடி குறைக்கப்பட்டிருக்கிறது.

இத்தகையச் சூழலில், பள்ளிக்கான நிதியில் இருந்து மாணவர்களுக்கு பிரியாணி வழங்க திட்டமிட்டு வருகிறோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறிய நிலையில், மாணவர்களுக்கு பிரியாணி வழங்குவதற்கான எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. அதோடு, கல்விக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு பிரியாணி வழங்குவது சந்தேகம் தான் என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow