மருத்துவர்-நோயாளி மோதலை தடுப்பது எப்படி.. மருத்துவர்கள் விளக்கம்
மருத்துவர்கள் காலி பணியிடங்களை நிரப்பினாலே மோதலை தவிர்க்க முடியும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் தெர்வித்துள்ளனர்.
சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவில் பாலாஜி என்பவர் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வருகிறார். மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் நேற்று புதன்கிழமை நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து கொண்டிருந்தபோது, பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார்.
இதனையடுத்து மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க சைதாபேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மருத்துவர் பாலாஜியின் உடல்நலத்தின் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 33 சதவீத மருத்துவர்கள் காலி பணியிடங்கள் உள்ளன அவற்றை நிரப்பினாலே மோதலை தவிர்க்க முடியும் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு மருத்துவர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 18,000 மருத்துவ பணியிடங்கள் உள்ளன. இவற்றில் 5000 பணியிடங்கள் காலியாக உள்ளது. இவற்றில் 33 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் ஒவ்வொரு சிறப்புப் பிரிவு மருத்துவமனையிலும் ஒரு மருத்துவர் நாள் ஒன்றுக்கு 200, 300 நோயாளிகளை பார்க்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் மருத்துவர்கள் அன்பு மணி நேரம் 5 மணி நேரம் மருத்துவம் பார்க்க வேண்டி உள்ளததால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது இதனால் நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழல் ஏற்படுகிறது.
கொரோனாவிற்கு பிறகு அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் அரசு புதிய மருத்துவமனைகள் புதிய கட்டமைப்புகளை செய்யும் போது கட்டிடங்களை மட்டுமே கட்டுகிறது. அடிப்படை வசதிகளை செய்தால் மட்டும் போதாது அதற்கு தேவையான அளவு மருத்துவர் நியமனம் செய்யாமல் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது.
முறையாக சேவை செய்ய முடியாததற்கு காரணம் தேவையான அளவு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும். விகிதாச்சார அடிப்படையில் மருத்துவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது இந்த நிகழ்விற்கு காரணம் எனவும் தெரிவித்தனர்.
What's Your Reaction?