பாஜகவுடன் கூட்டணி அமைத்த சமத்துவ மக்கள் கட்சி... ஆனா தொகுதி பங்கீடு?
வருகிற மக்களவை தேர்தலில் பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியை உறுதி செய்திருக்கும் நிலையில், தொகுதி பங்கீடு குறித்து எந்த தகவலும் இல்லை.
வருகிற மக்களவை தேர்தலில் பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியை உறுதி செய்திருக்கும் நிலையில், தொகுதி பங்கீடு குறித்து எந்த தகவலும் இல்லை.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திராவிட கட்சிகள், பாஜக மற்ற கட்சிகளுடன் கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்திருக்கிறது. இதனை அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிக்கையாக வெளியிட்டு உறுதி செய்திருக்கிறார்.
அறிக்கையில், பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்திருப்பதாகவும், நரேந்திர மோடியை 3-வது முறையாக பிரதமராக்கும் வகையில் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறியிருக்கிறார். பாஜகவுடன் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்ததாக கூறிய அவர், இதனால் கூட்டணி உறுதியானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், அந்த அறிக்கையில், எத்தனை தொகுதிகள் பாஜகவிடம் கேட்கப்பட்டது, அதற்கு என்ன பதில் வந்தது என்பதை சரத்குமார் குறிப்பிடவில்லை. மாறாக விரைவில் அடுத்தக்கட்ட அறிவிப்புகள் வெளியாகும் என சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?