El NINO தாக்கம்: வறட்சியை சமாளிக்க என்ன செய்ய வேண்டும்?

எல் நினோவால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளிலிருந்தும், வறட்சியை சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாகப் பார்போம்.

Sep 14, 2026 - 15:52
El NINO தாக்கம்: வறட்சியை சமாளிக்க என்ன செய்ய வேண்டும்?
El Niño

எல் நினோவின் தாக்கம் மழைப்பொழிவில் மாற்றங்களை ஏற்படுத்தி, விவசாயம் மற்றும் நீர்வளத்தைப் பாதிக்கக்கூடும். குறிப்பாக தென் மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழையை நம்பியிருக்கும் தமிழ் நாட்டில் இதன் தாக்கம் கவனிக்க வேண்டிய ஒன்று என்பதை கடந்த இதழில் பார்த்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற குறிப்புகளையும் தந்திருக் கிறார் சத்தியமங்கலம், மாவட்ட வன அலுவலரான கௌதம் சுப்ரமணியன் IFS.

நீர் பாதுகாப்பு:

சாதாரணக் குடும்பங்களைப் பொறுத்த வரை, வறட்சி நீடிக்கும் போது ஆழ்துளைக் கிணறுகள் வறண்டு போவது, சீரற்ற நகராட்சி குடிநீர் விநியோகம், தனியார் டேங்கர்களில் அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய சூழ்நிலை போன்ற பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தலாம். தினந்தோறும் குடிநீரைச் சேமித்து, அன்றாட தண்ணீர் சேவையைச் சமாளிப்பதில் குடும்பத்தினர் பெரும் சிரமத்தையும் மன அழுக்கத்தையும் எதிர்கொள்ள நேரிடலாம்.

அதனால் தண்ணீரை சிக்கனமாகக் கையாள வேண்டியது அவசியம். இயன்றவரை தண்ணீர் சேமிப்பு உறுதி செய்ய வேண்டும். நீர் சேமிப்பு என்பது வறட்சி வந்த பிறகு தொடங்க வேண்டிய நடவடிக்கை அல்ல; மழை பெய்யும் காலத்திலேயே தொடங்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை.

உணவு பாதுகாப்பு மற்றும் பணவீக்கம்:

இந்தியாவில் விவசாயத்தின் கணிசமான பகுதி பருவமழையைச் சார்ந்துள்ளது. போதிய மழை இல்லாமல் போனால் விதைப்பு தாமதமாகும். உரிய நேரத்தில் மழை பெய்யாமல் பருவமழை தப்பினால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். விளைச்சல் கணிசமாகக் குறையலாம்.

தமிழ்நாட்டிலும் விவசாய உற்பத்தி குறையும்போது, உணவுப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்படக்கூடும். விலை ஏற்றம் தவிர்க்க முடியாததாகி இருக்கும். இதன் தாக்கம் சாமானிய மக்களையும் சென்றடையும். குறிப்பாக, முக்கியமான காய்கறிகள், தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்து, பணவீக்கத்துக்கு வழிவகுக்கலாம்.

மழையை மட்டுமே நம்பியிருக்கும் நிலையை மாற்றி, மழைநீர் சேமிப்பு, நீர் சிக்கனப் பாசனம், வறட்சியைத் தாங்கும் பயிர்கள் மற்றும் பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவிக்க வேண்டும் விவசாயிகளுக்கு வானிலை அடிப்படையிலான சரியான ஆலோசனைகள் உரிய நேரத்தில் சென்றடைய வேண்டும்.

நீர்வளத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதுடன், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளைப் பாதுகாத்து நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்துவதும் அவசியம் மழைநீர் சேமிப்பு மற்றும் நீர்ப் பிடிப்புப் பகுதி மேலாண்மை வறட்சியின் தாக்கத்தைக் குறைக்க உதவும்.

பொருளாதாரச் சிரமம்:

பருவமழையின் மோசமான தாக்கத்தால் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டு, கிராமப்புற வருமானம் குறையலாம். இதனால் கிராமப்புற மக்களின் நுகர்வுச் செலவு குறைந்து, ஒட்டுமொத்தப் பொருளாதாரத் தேவையிலும் பாதிப்பு ஏற்படலாம் அதன் தொடர்ச்சியாக நகர்ப்புற வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகளும் பாதிக்கப்படக்கூடும்.

நீர்ச் சேமிப்பு நவீனப் பாசன முறைகள், பயிர் பல்வகைப்படுத்தல், வறட்சியைத் தாங்கக்கூடிய பயிர்கள் மற்றும் காலநிலைக்கு ஏற்ற வேளாண் முறைகளை ஊக்குவிக்க வேண்டும். விவசாயிகளின் வருமானத்தைப் பாதுகாக்க சேமிப்பு சந்தை வசதிகள் மற்றும் வேளாண்மை சார்ந்த பிற தொழில்களையும வலுப்படுத்த வேண்டும்.

பொறுப்புள்ள குடிமகனின் பங்கு:

உலகளாவிய சுடற்மேற்பரப்பு வெப்பநிலையை நம்மால் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், நாம் உதவியற்றவர்கள் இந்த புதிய காலநிலை மாற்றுத்திற்கு ஏற்ப மாறுவதற்கு செயலற்ற பார்வையிலிருந்து செயல்மிகு பொறுப்புள்ள குடிமகளாக மாறும் மாற்றம் தேவை. உண்மையான நீர் பாதுகாப்பு என்பது நமது வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும்.

மழைநீர் சேகரிப்பு:

மழைநீரை நமது வீட்டிலோ அல்லது நாம் இருக்கும் இடத்திலோ சேமிப்பது இன்று விருப்பமான விஷயமாக பார்க்க கூடாது அது அவசியமான ஒன்று. மழை பெய்யும்போது, கூரையில் இருந்து வழியும் நீரைச் சேகரித்து, தொட்டிகளிலோ அல்லது நிலத்தடி நீரைச் சேமிக்க உதவும் குழிகளிலோ விடலாம். எளிமையான இந்த முறையில் மழைநீரை சேமித்துவிடலாம். ஒவ்வொரு வீட்டிலும் அடுக்குமாடி குடியிருப்பிலும் அலுவலகத்திலும் செயல்படும் மழைநீர் வடிகால் அமைப்புகள் பொருத்தியிருக்கிறதா என்று உறுதி செய்வதன் மூலம், நாம் சுயமாக மில்லியன் லிட்டர்கள் தண்ணீரைச் சேமிக்கிறோம். இதன்மூலம், நமது உள்ளூர் நிலத்தடி நீர்த்தேக்கங்களை நிரப்பி நெருக்கடியில் உள்ள நகராட்சி அமைப்புகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முடியும். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வழிகளைப் பின்பற்றுவதுடன், தண்ணீரைச் சேமிப்ப தையும் தினசரி பழக்கமாக்க வேண்டும். இதுபோன்ற சிறிய முயற்சிகளே தாளடைவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்

க்ரே வாட்டர் மறுசுழற்சி:

மற்றும் தொட்டிகளில் இருந்து வரும் தண்ணீரை, கழிப்பறையைச் சுத்தம் செய்யவும். தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சவும் மீண்டும் பயன்படுத்தலாம்.

கசிவுகளை சரிசெய்தல்:

தண்ணீர் ஒரு சொட்டு கசியும் குழாய்கள், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விட்டர் தண்ணீரை வீணடிக்கக்கூடும் என்பது தெரியுமா? தனி வீடோ அடுக்கு மாடி குடியிருப்போ அலுவலகமோ பெருநிறுவனங்களோ எந்த இடமாக இருந்தாலும் தண்ணீர் கசிவு இல்லாமல் பார்த்துக்கொள்வது மிக மிக முக்கியம்.

நமது பகுதியில் உள்ள இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைக்க உதவும். மண்ணுக்கேற்ற உள்ளூர் மரங்களை நடுவதன் மூலம் மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும், நீர் வீணாவதைத் தடுக்கவும், சுற்றுப்புறத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் முடியும்.

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது காற்றைப்பெறுவதற்கு மட்டும் அல்ல; பூமியைக் காக்கவும் சொல்லப்படுகிறது. இதனால் வெப்பம் குறைந்து மழை பெய்ய உதவுகிறது. மேலும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன் படுத்துதல், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களைக் குறைத்தல் போன்ற செயல்களும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவும்.

சூழலுக்கு ஏற்றவாழ்க்கை முறையைப் பின்பற்ற எல் நினோ போன்ற காலநிலை மாற்றங் கள் நீர் மற்றும் உணவுப் பாதுகாப்பைப் பாதிக்கலாம். எனவே, மழைநீரைச் சேமித்து, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, சுற்றுச் வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் வறட்சியை எதிர்கொள்ளும் வலிமையான சமூகத்தை உருவாக்க முடியும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow