குழந்தையின் பெயரை முன்பே அறிந்த மகாபெரியவா....நடந்தது என்ன?
மகாபெரியவாவிடம் குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டிய தம்பதியரிடம், குடும்பப் பெரியவர் ஏற்கெனவே பெயர் வைத்திருப்பதை அறிந்து, அதையே தொடருமாறு கூறி பரிபூரண ஆசீர்வாதம் வழங்கிய அருள் நிகழ்வு.
மகாபெரியவா ஓரிக்கைல முகாமிட்டிருந்த காலகட்டம்... அந்த சமயத்துல இளம் வயசுத் தம்பதியர் தங்கள் குழந்தையோடு பெரியவாளை தரிசிக்க வந்திருந்தா. அந்தக் குழந்தைக்குக் கிட்டத்தட்ட ஒரு வயசு இருக்கும். பெரியவா முன்னால் குழந்தையைத் தரையில கிடத்தினவா, "சுவாமி, குழந்தைக்கு நீங்கதான் பேர் வைக்கணும்!'' அப்படின்னு வேண்டிண்டா.
குழந்தையை உத்துப் பார்த்த பெரியவா, "இவனுக்குதான் நாம கரணம் செய்துட்டேளே!" அப்படின்னார். அதிர்ந்துபோனா ரெண்டுபேரும். "சுவாமி, குழந்தை எங்களோடது. நீங்கதான் பேர் வைக்கணும்னு நாங்க வெயிட் பண்ணினோம். ஆனா, வர்றதுக்கு நாள் ஆகிடுத்து. ஆனா, இன்னும் பேர் வைக்கலை!" அப்படின்னா.
அமைதியா கேட்டுண்ட பெரியவா, "உங்க அகத்துல பெரியவா யாராவது இருந்தா, அவாகிட்டே கேளுங்கோ.குழந்தைக்கு நாம கரணம் செஞ்சாச்சு!" அப்படின்னு உறுதியா சொன்னார். ரொம்பவே குழம்பினவா, மடத்துல இருந்து வெளியில வந்து, ஊருக்கு டிரங்கால் போட்டுப் பேசினா.
அப்போ குழந்தையோட தாத்தா, "குழந்தைக்கு பதினோராம் நாள் பேர் வைக்கறது நம்ப பழக்கம். நீங்களோ பெரியவாதான் வைக்கணும்னு சொல்லிட்டேள். அதனால, பழக்கம் மாறிடக்கூடாதுன்னு நான்தான் குழந்தையோட காதுல அதோட பேரை மூணு தரம் சொன்னேன்!"
திரும்பவும் குழந்தையோட வந்து பெரியவாகிட்டே விஷயத்தைச் சொன்னா அந்தத் தம்பதி. “அவர் தெரியாமப் பண்ணிட்டார். மன்னிச்சு, பெரியவா வேற பேர் வைக்கணும்" அப்படின்னா.
"என்னை எல்லாரும் பெரியவான்னு கூப்பிட்டாலும், அவா அவா குடும்பத்துப் பெரியவாதான் அவாளுக்குப் பெரியவா. அதனால, உங்க குடும்பத்துப் பெரியவர் வைச்ச நாமகரணத்தையே குழந்தைக்கு வைச்சுடுங்கோ! என்னோட பரிபூரணமான ஆசிர்வாதம் உண்டு!''ன்னு அமைதியாச் சொன்னார் மகான்.
ஜெயாப்ரியன்
What's Your Reaction?