சிறிய ரக செயற்கைக்கோள்கள் தயாரிப்பில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் - மயில்சாமி அண்ணாதுரை பேச்சு
சிறிய ரக செயற்கைக்கோள்கள் செய்வதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் எரிபொருள் உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்கு முயற்சி செய்தால் செலவுகள் குறைவதோடு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு மாணவர்களிடம் சிறப்பு உரையாற்றிய அவர், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
குலசேகரப்பட்டினம் ஏவுதளம் சற்று வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன். வரக்கூடிய நாட்களில் தனியாரின் பங்களிப்போடு சிறிய ரக சேர்க்கை கோள்கள் விமான போக்குவரத்தை போல் தினமும் அனுப்புவதற்கு எதிர்பார்க்கிறேன். சாலை வசதி, மின்சார வசதி, தகவல் பரிமாற்ற வசதி இருந்தால் போதும். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் பணிகள் முடிய வாய்ப்புள்ளது என்று கூறினார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் பெரிய ஏவுகணைகளை இயக்கும் போது இலங்கைக்கும் நேரம் பறக்க முடியாது என்பதால் கிழக்கு நோக்கி வர வேண்டியுள்ளது அதற்கு எரிபொருள் நிறைய தேவைப்படுகிறது. குலசேகரபட்டினத்தில் இருந்து நேரடியாக அனுப்ப முடியும். விரைவில் மற்றும் சிறிய ரக செயற்கைக்கோள்கள் அனுப்ப வேண்டிய தேவைகள் இருப்பதால் குலசேகரப்பட்டினம் தான் சரியான இடம்.
கண்டிப்பாக அவர் இஸ்ரோவை வந்து பார்ப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவின் அடுத்த கட்ட விண்வெளி முயற்சிகளுக்கு அவரும் ஒத்துழைப்பேன் என்று சொல்லியிருக்கிறார். அதுவும் கண்டிப்பாக நடக்கும் என்று கூறினார்.
ஏவுதளம் மத்திய அரசு உருவாக்கி தருவதைப்போல, மாநில அரசும் அருகிலேயே ஒரு 2000 ஏக்கரில் ஸ்பேஸ் பார்க் தயார் செய்கிறார்கள். சிறிய ரக செயற்கைக்கோள்கள் செய்வதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் எரிபொருள் உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்கு முயற்சி செய்தால் செலவுகள் குறைவதோடு வேலைவாய்ப்பும் ஏற்படும் என்றார்.
இளைஞர்கள் தொழில் முனைவோராக வரவேண்டும் என்பதை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறார்கள். செயற்கைக்கோள்களுக்கு தேவையான நிறைய உதிரி பாகங்களில் ஏதேனும் ஒரு உதிரி பாகங்களை எடுத்து தயாரித்தால் கூட பலதரப்பட்ட தொழில்களுக்கு வாய்ப்பு உருவாகும். விண்வெளி ஆய்வகத்தில் தான் சேர வேண்டும் என்று இல்லாமல் இரண்டு மூன்று பேர் சேர்ந்து தனியாகவே தயாரிக்கலாம்.
ககன்யான் திட்டம் நாங்கள் திட்டமிட்டபடி தான் சென்றுள்ளது. சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு சென்ற பிறகு நடந்த பிரச்சனை போல ஏற்படும் என்பதால் இன்னும் கவனமாக கையாள வேண்டியுள்ளது. ககன்யான் இரண்டிலிருந்து மூன்று திட்டங்களுக்குப் பிறகு செல்வதற்கு வாய்ப்பு உள்ளது என கூறினார்.
What's Your Reaction?






