தொடர்ந்து பெய்த மழை.. அணைகளின் நிலவரம் என்ன?
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கர்நாடகா மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி ஃபால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதன் காரணமாக அனைத்து அருவிகளிலும் 4வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரத்து 531 கன அடியிலிருந்து 16 ஆயிரத்து 196 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 90.87 அடியில் இருந்து 92 அடியாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அணை மற்றும் குப்பனத்தம் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் 119 அடியிலிருந்து தற்போது 98.70 அடியாக தண்ணீர் நிரம்பியுள்ளது. மலைப்பகுதிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் எந்நேரத்திலும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் துறை சார்ந்த அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக கன மழை பொழிவு காரணமாக கோவை முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையின் வரையறுக்கப்பட்ட கொள்ளளவு 44.61 அடியாக உள்ள நிலையில் தொடர் மழை காரணமாக 43.49 அடியை எட்டியுள்ளதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
What's Your Reaction?