பேரடாக்ஸ் குறும்படத்திற்காக பாடல் எழுதிய இயக்குநர் சேரன்!

ப்ரியா கார்த்திகேயன் இயக்கியுள்ள குறும்படமான 'பேரடாக்ஸ்' (Paradox) படத்தின் டிரைலரை சேரன், சசிகுமார், பிரசன்னா, ஆரி அர்ஜுனன் ஆகியோர் சமீபத்தில் வெளியிட்டனர்.

பேரடாக்ஸ் குறும்படத்திற்காக பாடல் எழுதிய இயக்குநர் சேரன்!
filmmaker cheran has penned lyrics for a song in paradox short film

தி செய்லர்மேன் பிக்சர்ஸ் பேனரில் கார்த்திகேயன்.எல் தயாரிப்பில் பிரியா கார்த்திகேயன் இயக்கத்தில் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மிஷா கோஷல் நடிக்கும் உளவியல் அடிப்படையிலான கதை கொண்ட குறும்படத்திற்கு 'பேரடாக்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. முரண்பாடு என்று தமிழில் பொருள்படும் இந்த தலைப்பு மனித உளவியல் சார்ந்த கதை என்பதால் வைக்கப்பட்டுள்ளது என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மிஷா கோஷல் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'பேரடாக்ஸ்' குறும்படத்தின் டிரெய்லரை திரையுலக பிரபலங்களான இயக்குநரும்,நடிகருமான சேரன், எம்.சசிகுமார், நடிகர் பிரசன்னா மற்றும் நடிகர் ஆரி அர்ஜுனன், இயக்குநர் வெங்கட்பிரபு ஆகியோர் வெளியிட்டதோடு படக்குழுவினரை வாழ்த்தினர். 

இந்த குறும்படத்திற்காக இயக்குநர் சேரன் ஒரு பாடலை எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் சேரன் இதற்கு முன்னதாக ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, ஜே கே என்னும் நண்பனின் வாழ்க்கை, திருமணம் போன்ற படங்களிலும் பாடல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

25 நிமிடங்கள் ஓடும் பேரடாக்ஸ் குறும்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரியா கார்த்திகேயன், "ஒரு மனிதனின் உளவியல் பற்றி இப்படம் அலசுகிறது. சராசரி வாழ்க்கையை வாழும் நாயகன் கொஞ்சம் கொஞ்சமாக தனது மனைவி மற்றும் குடும்பத்தை விட்டு விலகி செல்கிறான். இந்நிலையில் ஒரு எதிர்பாராத சம்பவம் நிகழ்கிறது. இதை தொடர்ந்து என்ன ஆகிறது என்பதை 'பேரடாக்ஸ்' பார்வையாளர்களுக்கு விளக்கும்," என்றார். 

'பேரடாக்ஸ்' குறும்படத்திற்கு கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைக்க, ஃபைசல் வி காலித் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். படத்தொகுப்பை ஹரிபிரகாஷ் மேற்கொண்டுள்ளார். ஒலி வடிவமைப்பு மற்றும் ஒலிக் கலவையை எஸ் சிவகுமார் மற்றும் கிருஷ்ணன் சுப்பிரமணியனும், கலரிங்கை குபேந்திரனும், டிஐ பணிகளை இன்பினிட்டி மீடியாவும் செய்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow