Rajini: “திடீர்ன்னு Heart-Attack… ரஜினி தான் அத்தனை லட்சம் கொடுத்து காப்பாத்தினார்..” லிவிங்ஸ்டன்
பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றியும் அவர் உதவியது குறித்தும் மனம் திறந்துள்ளார். சமீபத்தில் வெளியான லால் சலாம் படத்தில் ரஜினியுடன் லிவிங்ஸ்டனும் நடித்திருந்தார்.
ஹீரோ, வில்லன், காமெடியன், குணச்சித்திர நடிகர் என தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பிரபலமாக வலம் வருகிறார் லிவிங்ஸ்டன். 1982ம் ஆண்டு ரிலீஸான டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் அறிமுகமான அவர், தொடர்ந்து பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தார். விஜயகாந்த் ஹீரோவாக நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில் லிவிங்ஸ்டனின் கேரக்டர் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து ஹீரோவாகவும் பல படங்களில் நடித்துள்ளார்.
சுந்தர புருஷன், சொல்லாமலே படங்கள் லிவிங்டனுக்கு மிகப் பெரிய ஹிட் கொடுத்தன. இதனால் ஒருகட்டத்தில் பிஸியான நடிகராக வலம் வந்தார் லிவிங்ஸ்டன். கடைசியாக ரஜினியின் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். முன்னதாக அண்ணாத்த, சிவாஜி, வீரா போன்ற படங்களிலும் ரஜினியுடன் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் லால் சலாம் படத்தில் நடித்த போது ரஜினி தனக்கு உதவியது குறித்து மனம் திறந்துள்ளார்.
அதாவது லால் சலாம் படத்தில் நடித்த போது லிவிங்ஸ்டனின் மனைவிக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளது. அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினி தான் பணம் கொடுத்து உதவியுள்ளாராம். இதுபற்றி நமது குமுதம் சேனலுக்கு லிவிங்ஸ்டன் கொடுத்துள்ள பேட்டியில், ”எனது மனைவிக்கு திடீரென ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது… என்ன பண்றதுன்னே தெரியாம அப்படியே உடைஞ்சுப் போயிருந்தேன். ட்ரீட்மெண்ட் எடுக்கலன்னா ஒரு மாசத்துல இறந்துடுவாங்கன்னு டாக்டர்ஸ்லாம் சொல்லிட்டாங்க.”
“அப்போ லால் சலாம் படத்துல நடிச்சிட்டு இருந்தேன், அதுல வேலை பார்த்த உதவி இயக்குநர்கள் இதபத்தி ரஜினி சார் கிட்ட சொல்லிருப்பாங்கன்னு நினைக்கிறேன். உடனே என்ன கூப்ட்டு என்னாச்சு என்னன்னு விசாரிச்சார். உடனே செலவுக்கு எவ்ளோ வேணும்ன்னு கேட்டு 15 லட்சம் ரூபாய் கைல கொடுத்தார். இப்ப என் மனைவி உயிரோட இருக்க காரணம் ரஜினி சார் தான்..” என லிவிங்ஸ்டன் உருக்கமாகக் கூறியுள்ளார். அப்பவும் “தான் ரஜினியிடம் பணம் வாங்க யோசித்ததாகவும், ஆனால் அவர் தான் இன்னும் வேணும்ன்னா கூட ஒரு ப்ரதரா நினைச்சு என்கிட்ட கேளுன்னு” சொன்னதாக லிவிங்ஸ்டன் மனம் திறந்துள்ளார். லிவிங்ஸ்டனின் இந்த பேட்டி ரஜினி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
What's Your Reaction?