'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு..!
இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன் ஆகியோர் பிரதான பாத்திரங்களாக நடித்து வரும் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு 'டூரிஸ்ட் ஃபேமிலி' என பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகி வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்-மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
'டூரிஸ்ட் ஃபேமிலி' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் சிம்ரன் மற்றும் சசிக்குமார் கணவன், மனைவியாக நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களது மகன்களுடன் ஊரை விட்டு யாருக்கும் தெரியாமல் செல்லும் முடிவில் வாடகை வீட்டில் இருக்கும் தங்களது பொருட்களை மட்டும் வைத்து கொண்டிருக்கின்றனர். மூத்த மகனாக நடித்திருக்கும் மிதுன் ஜெய் சங்கரிடம் நீ இன்னும் ரெடியாகவில்லையா என சசிக்குமார் கேட்க, நான் ஷிலோ இல்லாமல் வர இயலாது என்று கூறுகிறான். அதற்கு சசிக்குமார் யாருடா அந்த ஷிலோ என்று கேட்க நான் காதலிகும் பெண் என்று கூறுகிறான். பின்னர் கடைசி பையன் கமலேஷ் அப்பா சின்ன வயதில் வாங்கி கொடுத்த ஷூ கிடைத்துவிட்டது என்று சந்தோஷமாக கூறுகிறான்.
அந்த நேரத்தில் யாரோ வீட்டின் கதவை தட்ட கமலேஷிடம் சத்தம் போடாமல் சென்று யார் என்று பார்க்க சொல்கிறார் சிவக்குமார். ஆனால், கமலேஷ் காணாமல் போய் திரும்ப கிடைத்த, நடந்தால் சத்தம் கேட்கும் ஷூவை அணிந்து கொண்டு, கதவை திறக்கிறான். கதவை திறந்தால், கமலேஷின் நண்பன் அவனது தந்தையுடன் வந்திருப்பான். என்னைப் பார்க்க வந்துவிட்டாயா என்று கேட்பது நகைச்சுவையாக உள்ளது. மேலும், வீட்டிற்கு வந்தவர் நீங்கள் குடும்பத்தோடு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு ஓடப்போவதாக உங்கள் மகன், என் மகனிடம் கூறியிருக்கிறான். அதனால் நீங்கள் போவதற்குள் பார்த்துவிடலாம் என்று வந்தோம் என்று கூறியதை கேட்ட சசிக்குமார் அதிர்ச்சியில் அப்படியே நிற்பார். காமெடி கதைக்களத்துடன் உருவாகி இருக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படத்தின் வசனங்கள் இலங்கை தமிழ் பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம்பெறும் காட்சிகள் ரசனையுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
What's Your Reaction?