வார கடைசிநாளில் ஷாக் நியூஸ்: தங்கம் சவரனுக்கு ரூ.800 உயர்வு

வார கடைசி நாளான இன்று தங்கம், வெள்ளி இரண்டு விலை உயர்ந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. 

வார கடைசிநாளில் ஷாக் நியூஸ்: தங்கம் சவரனுக்கு ரூ.800 உயர்வு
தங்கம் சவரனுக்கு ரூ.800 உயர்வு

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் தங்கம் கடந்த சில மாதங்களாக புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. ஈரான் போர் பதற்றம் காரணமாக தங்கம் ஏற்றம் இறக்கத்துடன் காணப்படுகிறது. 

சென்னையில் நேற்றைய தினம்  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.480 சரிந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,800-க்கு விற்பனையானது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் நேற்று அதிரடியாகச் சரிந்துள்ளது. வெள்ளி ஒரு கிலோவுக்கு ஒரே நாளில் ரூ.5,000 குறைந்து, ரூ.2,65,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து, ரூ.265-க்கு விற்பனையானது. 

சென்னையில் இன்றைய தினம் 2 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலைக்கு கிராம் ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.270-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow