வார தொடக்க நாளே ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி: சவரனுக்கு ரூ.2,200 உயர்வு
வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம், வெள்ளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நகைப்பிரியர்களுக்கு தங்கத்திற்கு இணையாக வெள்ளியும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது.
கடந்த சனிக்கிழமை சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,16,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,620-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உச்சம் அடைந்துள்ளது. கடந்த வாரம் சனிக்கிழமை வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.3,55,000-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.355-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு 275 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,025-க்கும் சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் தங்கம் புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.
தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 375 ரூபாய்க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
What's Your Reaction?

