ராசி பலன்கள்...உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கு...வாங்க தெரிந்து கொள்ளலாம்?
இன்றைக்கு 12 ராசிக்காரர்களுக்கும் நாள் எப்படி இருக்கு? மேஷம் முதல் மீனம் வரை உள்ள பலன்களை விரிவாகப் பார்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் உற்சாகம் அதிகரிக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்துச் செயல்படுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளைத் தள்ளிப்போடுவது நல்லது. சிலருக்குத் திடீர் பணவரவு மகிழ்ச்சி அளிக்கும். சகோதரர்கள் தொடர்பாகச் சுபச் செலவுகள் ஏற்படலாம். உடல்நலத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று வழக்கமான பணிகளில் மட்டும் ஈடுபடுவது நல்லது. சிலருக்குத் திடீர் பணவரவு கிடைக்கலாம். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். நண்பர்கள் மூலம் முக்கியப் பிரச்னை ஒன்று சுமுகமாக முடிவுக்கு வரும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்குச் சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் அளிக்கும். தந்தை வழியில் திடீர் செலவுகள் ஏற்படலாம். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படலாம். தொலைபேசி வாயிலாகச் சுபச் செய்தி கிடைக்கலாம். உங்கள் சிரமங்களைப் புரிந்துகொண்டு மற்றவர்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்குத் தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகலாம். அதிகாரிகளின் சந்திப்பு மூலம் காரியங்களில் வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது நல்லது. வாகனப் பயணத்தில் கவனம் தேவை. வீட்டுப் பராமரிப்புப் பணிகளால் உடல் சோர்வு ஏற்படலாம். வியாபாரத்தில் பிற்பகலுக்குப் பிறகு விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். மற்றவர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்துகொள்ளுங்கள். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கலில் சிறிய வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்குப் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதரர்கள் தொடர்பான காரியங்களில் அலைச்சலும் செலவும் ஏற்பட்டாலும் இறுதியில் சாதகமான முடிவு கிடைக்கும். மனதில் அவ்வப்போது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத பணவரவு கிடைக்கலாம். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்வழி உறவினர்களால் சில தர்மசங்கடங்கள் ஏற்படலாம். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்புள்ளது. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களுக்காகச் செலவு செய்ய வேண்டியிருக்கலாம். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். துணிச்சலுடன் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் ஆலோசனைகளுக்கு உதவுவதுடன், அவர்களால் ஏற்பட்ட இடையூறுகளும் நீங்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த பணம் கிடைத்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படலாம். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. தாய்வழி உறவினர்களுக்காகச் செலவு செய்ய வேண்டியிருக்கும். மனதில் அவ்வப்போது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்பப் பெரியவர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமையுடன் நடந்துகொள்ளுங்கள். வியாபாரத்தில் திடீர் செலவுகள் ஏற்படலாம். பணியாளர்கள் உற்சாகமாகச் செயல்படுவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமும் சுறுசுறுப்பும் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். உங்கள் யோசனைகளை வாழ்க்கைத்துணை ஏற்றுக்கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கலாம். பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் முக்கியப் பிரமுகரின் அறிமுகமும், அவர் மூலம் ஆதாயமும் கிடைக்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்குப் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை முழு ஒத்துழைப்பு அளிப்பார். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிப்பதால் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். பிள்ளைகளால் அலைச்சலும் சங்கடங்களும் ஏற்படலாம். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் உருவாகலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள். இருப்பினும், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணையின் உறவினர்கள் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சி தொடர்பான பேச்சுவார்த்தைகள் இழுபறிக்குப் பிறகு சாதகமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் கூடும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் உற்சாகம் அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்ற அலைச்சலும் சோர்வும் ஏற்படலாம். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கலாம். வியாபாரத்தில் பெரிய பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பில்லை.
What's Your Reaction?

