3 நாட்களுக்கு பிறகு விலை குறைவு: சவரனுக்கு ரூ.160 சரிவு
3 நாட்களாக தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை ஆகி வந்தது. இந்த நிலையில், இன்று தங்கம், வெள்ளி இரண்டும் சற்று விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தறுமாறாக உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 1 லட்ச ரூபாயை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆவதால் முதலீட்டாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடந்த மூன்று தினங்களாக தங்கம், வெள்ளி விலை மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்து ரூ. 1,16,000க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.14,500க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.290க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தினம் சவரனுக்கு ரூ.160 குறைந்து, தங்கம் சவரன் ரூ.1,15,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,480 விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ரூ.5 குறைந்து, கிராம் ரூ.285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,85,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
What's Your Reaction?