பாஜக 20 தொகுதிகளில் போட்டி.. த.மா.கா.வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான பங்கீட்டை நிறைவு செய்துள்ளதாக தெரிவித்தார். பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும், தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 4 பேர் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக அவர் குறிப்பிட்டார். இந்த வேட்பாளர் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என கூறிய அண்ணாமலை, தொகுதிப் பங்கீடு மகிழ்ச்சியாக, திருப்தியாக, சுமூகமாக நடைபெற்றதாகவும், எல்லோருக்கும் என்ன வேண்டுமோ அது எல்லோருக்கும் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் திராவிட அரசியலுக்கு மாறுபட்ட அரசியலை பாஜக முன்னெடுக்கும் என அண்ணாமலை கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக - 20, பா.ம.க - 10, த.மா.கா - 3, அ.ம.மு.க - 2, இந்திய ஜனநாயக கட்சி - 1, புதிய நீதிக்கட்சி - 1, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் - 1, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் - 1 என 39 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?