கனமழை: அரசு இதெல்லாம் ஏற்பாடு செய்திருக்கு..தலைமைச் செயலாளர்
அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மீட்புப் படகுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின்னர் தலைமைச்செயலாளர் முருகானந்தம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அதிகமாக உள்ளது.வானிலை ஆய்வாளர்கள் நாளையிலிருந்து அதிக மழை இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். வட கடலோர மாவட்டங்கள் அதிக கனமழை இருக்கும் என்று என தெரிவித்துள்ளனர்.ஆகையால் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
அதன் அடிப்படையில் முதலமைச்சர் என்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதன் காரணமாக நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மீட்புப் படகுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 300 இடங்களில் தண்ணீர் தேங்கக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.
பருவமழை பாதிப்புகளை கண்டறிய மக்களுக்கு உதவ ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் பம்புகள் அதிகளவு கையிருப்பு உள்ளது. சென்னையில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் பள்ளம் உள்ள பகுதிகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கத்தில் நீர் இருப்பு குறைவாக தான் உள்ளது. 33 சதவீதம் என்ற அளவில் உள்ளது. கடந்த முறை எங்கெங்கு தண்ணீர் தேங்கியது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் நீர்நிலைகளில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பது தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்கப்படும். தேசிய பேரிடர் படையினரை ஒரு சில மாவட்டங்களுக்கு அனுப்ப உள்ளோம் என தெரிவித்தார்.
What's Your Reaction?