கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை - திருத்தணி சோகம்
திருத்தணியில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரை உறைய வைத்துள்ளது.
திருத்தணியில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணி சித்தூர் சாலையில் கமலா திரையரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், இவருக்கு மனைவி 4 மகள்கள், 1 மகன் உள்ளனர். மூத்த மகள் கலைசெல்விக்கு 18 வயதாகிறது. அவர் திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை, மணிகண்டன் அவரது மனைவி, மூன்று மகள்கள், ஒரு மகன் என கலைச்செல்வியைத் தவிர அனைவரும் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர். எனவே வீட்டில் கலைசெல்வி மட்டும் தனியாக இருந்துள்ளார். மாலை வீட்டின் அருகில் டீ கடை வைத்திருபப்வர் கல்லூரி மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டிருப்பதைப் பார்த்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காவல் துறையினர் தூக்கிட்டு இறந்த கல்லூரி மாணவி கலைச்செல்வியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர். மாணவியின் தற்கொலைக்குப் பின் உள்ள காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. காவல் துறை விசாரணையில் கண்டறியப்படும். வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
What's Your Reaction?