முடிவுக்கு வந்த நடுநிலைமை! Nato-வில் இணைந்தது ஸ்வீடன்

ஸ்வீடனின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Mar 8, 2024 - 07:47
முடிவுக்கு வந்த நடுநிலைமை! Nato-வில் இணைந்தது ஸ்வீடன்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலின் எதிரொலியால் 8 ஆண்டு நடுநிலை கொள்கையைத் தளர்த்தி, நேட்டோ நாடுகள் அமைப்பில் ஸ்வீடன் இணைந்துள்ளது. 

இரண்டாம் உலகப் போருக்குப் பின் பல்வேறு நாடுகள் ஒப்பந்த அடிப்படையில் தங்களுக்குள் ராணுவ உதவிகளை வழங்கிக் கொள்ள உருவாக்கப்பட்ட அமைப்பே நேட்டோ எனப்படுகிறது. வட அட்லாண்டிய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள நேட்டோ அமைப்பில் 31 நாடுகள் இருந்த நிலையில், அண்மையில் ஸ்வீடன் 32வது நாடாக இணைந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கும், ரஷ்யாவுக்கும் ஆதரவளிக்கும் நிலைபாட்டை ஸ்வீடனும், ஃபின்லாந்தும் நீண்ட காலமாக கடைபிடித்து வந்தன. 

இந்நிலையில், கடந்தாண்டு பின்லாந்து நாடோ ராணுவ ஒப்பந்தத்தில் இணைந்து கொண்டது. அதைத் தொடர்ந்து ஸ்வீடன் தற்போது இணைந்துள்ளது. வட அட்லாண்டிய ஒப்பந்த நடைமுறைகளை நிறைவு செய்தபின், அதிகாரப்பூர்வமாக நேட்டோவில் இணைந்துவிட்டதாக ஸ்வீடனின் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் அறிவித்தார். அந்நிகழ்ச்சியில், அமெரிக்காவின் தலைமைச் செயலர் ஆண்டனி பிளின்கின் தலைமை தாங்கினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow