“இனி நான் பாடவே மாட்டேன்”... ட்ரோல்களில் சிக்கி சின்னாபின்னமான எஸ்.ஜே.சூர்யா முடிவு!

‘பொதிகை.. மலையை... பிரிந்து..’ என்ற பாடலுக்காக ட்ரோல்களில் சிக்கிய எஸ்.ஜே.சூர்யா, இனி பாடவே மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

Aug 19, 2024 - 16:34
“இனி நான் பாடவே மாட்டேன்”... ட்ரோல்களில் சிக்கி சின்னாபின்னமான எஸ்.ஜே.சூர்யா முடிவு!
ட்ரோல்களில் சிக்கி சின்னாபின்னமான எஸ்.ஜே.சூர்யா முடிவு

தமிழில் முன்னணி நடிகராகவும் இயக்குநராகவும் விளங்கி வரும் எஸ்.ஜே.சூர்யா, தனது ரசிகர்களால் ‘நடிப்பு அரக்கன்’ என செல்லமாக அழைக்கப்படுகிறார். எப்படிப்பட்ட கேரக்டராக இருந்தாலும், அதனை உள்வாங்கி எவ்வளவு துல்லியமாக, சிறப்பாகக் கொடுக்க முடியுமோ அதை சிறப்பாக செய்வதில் வல்லமை பெற்றவர் இவர். தமிழில் ‘வாலி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே. சூர்யா, ’குஷி’, ‘நியூ’, ‘அன்பே ஆருயிரே’, ‘இசை’ உள்ளிட்ட படங்களை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்தார். மேலும் ‘இசை’ படத்துக்கு அவரே இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து 2017ம் ஆண்டு, அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் மூலம் வில்லனாக அறிமுகமாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதைத் தொடர்ந்து மாநாடு, மார்க் ஆண்டனி, டான், ஸ்பைடர் உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பை அள்ளித் தெளித்து மக்களை மிரளச் செய்தார். இதனால்தான் அவரை அவரது ரசிகர்கள் ‘நடிப்பு அரக்கன்’ என அழைக்கின்றனர். 

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் சைக்கோ வில்லனாகக் களமிறங்கிய எஸ்.ஜே. சூர்யா, தனது நடிப்பில் பிச்சு உதறியிருப்பார். இதே போல் ‘ஸ்பைடர்’ படத்தில் கொடுக்கப்பட்ட சைக்கோ வில்லன் ரோலிலும் மிரட்டியிருப்பார். அவரது நடிப்பை பற்றி புகழ வேண்டும் என்றால் ஒரு நாள் பத்தாது. 

எஸ்.ஜே.சூர்யா, அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு இண்டர்வியூ கொடுத்திருந்தார். அப்போது அவரை ஒரு பாட்டு பாடச் சொல்லி அந்த தொகுப்பாளர் கேட்பார். உடனே, ‘அன்பே ஆருயிரே’ படத்தில் வரும் ‘பொதிகை.. மலையை... பிரிந்து..’ என்ற பாடலை பாடினார். அவ்வளவுதான். நெட்டிசன்களின் கைகளில் தொக்காக மாட்டிய இது, ஒரு சூப்பரான ட்ரோல் கண்டெண்ட்டாக மாறியது. இது வரை எந்தவித சர்ச்சைகளிலும், ட்ரோல்களிலும் சிக்காத எஸ்.ஜே.சூர்யாவை மீம் கிரியேட்டர்கள் சும்மா வச்சு செய்து விட்டனர். சமூக வலைதளத்தை திறந்தாலே அதில் எஸ்.ஜே.சூர்யா பாடிய ‘பொதிகை.. மலையை... பிரிந்து..’ என்ற காணொளிதான் ட்ரோலில் சிக்கி சின்னாப்பின்னமாகிக் கொண்டிருந்தது.

இந்நிலையில், நானி நடிப்பில் உருவாகியுள்ள ‘சரி போதா சரிவாராம்’ என்ற தெலுங்கு படத்திற்காக எஸ்.ஜே.சூர்யா இண்டர்வியூ கொடுத்தார். அப்போது அவரை தொகுப்பாளர் பாட்டு பாடச்சொல்லி கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த அவர், “நான் இதுவரைக்கும் எந்த ட்ரோல்லையும் சிக்காம இருந்தேன். ராயன் பட புரமோஷன் தொடர்பா ஒரு பேட்டி கொடுத்தேன். அப்போது என்னை பாட சொன்னார்கள். நானும் பாடினேன். அவ்வளவுதான் இப்போது வரை அதை வீடியோவை மீம்ஸாக போட்டு ட்ரோல் செய்து வருகிறார்கள். எனவே, நான் பாடவே மாட்டேன்” என ஜாலியாக பேசினார்.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow