Napoleon: நடிகர் சங்க கட்டடத்துக்கு 1 கோடி நிதி… அள்ளிக் கொடுத்த அமெரிக்கா செட்டில் கோலிவுட் பிரபலம்
நடிகர் சங்கக் கட்டட பணிகளுக்கு நெப்போலியன் 1 கோடி ரூபாய் வைப்பு நிதி கொடுத்துள்ளது கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
சென்னை: தமிழ்த் திரையுலகில் நீண்டகால பிரச்சினையாக இருந்து வருவது நடிகர் சங்கக் கட்டம். இதனை நாசர் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகள் முடிவுக்கு கொண்டு வரவுள்ளனர். அதன்படி கடந்த வாரம் நடிகர் சங்க கட்டட பணிகள் தொடங்கிவிட்டன. சென்னை தியாகராய நகரில் நடைபெற்று வரும் நடிகர் சங்கக் கட்டட பணிகளை தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மேற்பார்வையிட்ட புகைப்படங்கள் வைரலாகி வந்தன.
இந்நிலையில், நடிகர் சங்க கட்டட நிதிக்காக பிரபல நடிகர் நெப்போலியன் நிதி கொடுத்துள்ளார். சீனியர் நடிகரான நெப்போலியன் கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, விருமாண்டி, தசவதாரம் என பல படங்களில் நடித்துள்ளார். ஹீரோ, வில்லன், கேரக்டர் ரோல் என வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து பிரபலமான நெப்போலியன், தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். சினிமா மட்டுமின்றி அரசியலிலும் களமிறங்கிய நெப்போலியன், இன்னொரு பக்கம் சாஃப்ட்வேர் பிஸினஸில் கலக்கி வருகிறார்.
2000 – 2006 ஆம் காலக்கட்டத்தில் நடிகர் சங்கத்தின் உபதலைவராகவும் பொறுப்பேற்றவர் நெப்போலியன். தற்போது நடிப்பில் அதிக ஆர்வம் காட்டாத அவர், நடிகர் சங்க கட்டத்துக்கு வைப்பு நிதியாக ஒரு கோடி வழங்கியுள்ளார். ரஜினி, கமல், விஜய், உதயநிதி வரிசையில் நெப்போலியனும் ஒரு கோடி கொடுத்துள்ளது கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. நெப்போலியன் தற்போது அதிகமாக படங்கள் நடிக்கவில்லை என்பதோடு முன்னணி நடிகர் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்து அசத்தியுள்ளார்.
What's Your Reaction?