கூட்டணிக்கு வந்தால் ஆட்சியில் பங்கு - தவெக தலைவர் விஜய்
எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., இருவரையும் கூட கூத்தாடி, கூத்தாடி என்று தான் மற்றவர்கள் அழைத்தார்கள்.
தவெகவுடன் கூட்டணிக்கு வந்தால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரியில் தொடங்கினார் நடிகர் விஜய். இதைத்தொடர்ந்து 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தவெக போட்டியிடும் என அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், தவெகவின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். பின்னர் பேசிய தவெக தலைவர் விஜய், தகுதி இருந்தும் தடையாக நீட் தேர்வு உள்ளது. எனது தங்கை மரணம் ஏற்படுத்திய அதே வலியை அனிதா மரணம் ஏற்படுத்தியது. மேலும், கூத்தாடி என்பது கேவலாமானதும் அல்ல, கெட்டவார்த்தை அல்ல. சினிமாவில் நுழைந்தபோது எனக்கு முகம் சரியில்லை, ஆள் சரியில்லை அழகில்லை, முடி, நடை சரியில்லை என்றெல்லாம் அவமானப்படுத்தினார்கள். ஆனால், கொஞ்சம் கூட கலங்காமல் உழைத்து உழைத்து மேலே வந்தவன் தான் இந்த கூத்தாடி. மேலும், எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., இருவரையும் கூட கூத்தாடி, கூத்தாடி என்று தான் மற்றவர்கள் அழைத்தார்கள்.
சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல, தமிழகர்களின் கலை, இலக்கியம், வாழ்வியல், பண்பாடு தான் சினிமா.மேலும், உன்னோட அரசியல் கோட்பாடு தான் என்ன-னு கேக்குறவங்களுக்கு ஒரு பதில்தான். எல்லாருக்கும் எல்லாமே கிடைக்கணும். அவ்ளோதான் என்றார்.தொடர்ந்து பேசிய அவர், நம்மோடு அரசியல் பயணத்தில் நம்மை நம்பி வருபவர்களும் இருப்பார்கள். அவர்களையும் நாம் அன்போடு வரவேற்க வேண்டும். சமமான அதிகாரப் பங்கு கொடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், என்னடா இந்த விஜய்.. யாரு பேரையும் வெளிப்படையா சொல்ல மாட்றானே... பயமா.. என்றெல்லாம் யோசிப்பவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். யார் பெயரையும் சொல்லி அசிங்கப்படுத்த நான் இங்கு வரவில்லை. டிசெண்ட் ஆன அரசியலை செய்யவே வந்திருக்கோம் என தெரிவித்தார்.
What's Your Reaction?