663 நாட்களுக்கு பின் குறைந்த பெட்ரோல், டீசல் விலை... இன்று அமல்... எவ்வளவுன்னு தெரியுமா?

663 நாட்களுக்கு பின் குறைந்த பெட்ரோல், டீசல் விலை... இன்று அமல்... எவ்வளவுன்னு தெரியுமா?

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 663 நாட்களுக்குப் பிறகு ரூ. 2 குறைக்கப்பட்ட நிலையில், இந்த விலை மாற்றம் இன்று (மார்ச் 15)  முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 குறைப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதன்படி இன்று (மார்ச்- 15) காலை 6 மணி முதல் இந்த புதிய விலை இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பின் அடிப்படையில், சென்னையில் ரூ.102.60 -ஆக இருந்த 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ரூ94.24-ஆக இருந்த டீசலின் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலைக்குறைப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள அண்ணாமலை, கடந்த 28 மாதங்களில் மத்திய அரசு பெட்ரோல் விலையில் 15 ரூபாயும், டீசல் விலையில் 18 ரூபாயும் குறைத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் "திமுக, தனது தேர்தல் வாக்குறுதியாக பெட்ரோல் விலையில் ரூ.5-ம், டீசல் விலையில் ரூ.4-க்கும் குறைக்கப்படும் எனக்கூறி ஆட்சிக்கு வந்து 35 மாதங்கள் கடந்துள்ளது. ஆனால் இதுவரை அதனை நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போது தூக்கத்தில் இருந்து விழிக்கப் போகிறீர்கள்" என்று அண்ணாமலை தமது எக்ஸ் வளைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow