அக்டோபரில் அமைச்சரவை மாற்றம்... உள்ளே வரும் செ.பா... வெளியேறும் 2 முக்கிய அமைச்சர்கள்..!
செந்தில்பாலாஜி ஜாமினில் வெளிவந்துள்ள நிலையில், வரும் அக்டோபரில் தமிழக அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட நாட்களாவே தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழ உள்ளதாகவும், அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முன், உதயநிதியை துணை முதலமைச்சராக்கிவிட்டு, பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்துவிட்டுத்தான் செல்வார் என்றெல்லாம் பேசப்பட்டது. முதலமைச்சர் அமெரிக்காவே சென்றுவந்துவிட்டார், உதயநிதி இன்னும் துணை முதலமைச்சராக்கப்படவில்லை.
திமுக சீனியர்கள் பேசும் ஒவ்வொரு மேடையிலும், துணை முதலமைச்சர் பதவி குறித்துத்தான் பேசிவருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், “அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது” என்று தெரிவித்தார். இதனால், அமைச்சரவையில் மாற்றம் என்பது உறுதியாகியுள்ளது. ஏமாற்றம் இருக்காது என்பதால், உதயநிதி துணை முதலமைச்சராவதும் உறுதி என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், அமைச்சரவை மாற்றங்கள் பொறுத்தவரை 2 முக்கிய அமைச்சர்களை மாற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும், புதிதாக 2 அமைச்சர்கள் உள்ளே வர வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெளியேற்றப்படும் 2 அமைச்சர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ஒருப்பக்கம் இருந்தாலும், அண்மையில் ஜாமின் பெற்று சிறையில் இருந்து வெளியில் வந்துள்ள செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சராகலாம் என்று கூறப்படுகிறது. செந்தில்பாலாஜிக்கு மின்சாரத்துறையே மீண்டும் வழங்கப்படலாம் என்றும், இதுகுறித்தான அறிவிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
What's Your Reaction?