திமுக கூட்டணி நாமக்கல் வேட்பாளர் திடீர் மாற்றம்... புது வேட்பாளர் யார்?

திமுக கூட்டணிக் கட்சியான கொ.ம.தே.க கட்சி தங்கள் நாமக்கல் தொகுதி வேட்பாளரை திடீரென மாற்றியுள்ளது.

Mar 22, 2024 - 13:58
திமுக கூட்டணி நாமக்கல் வேட்பாளர் திடீர் மாற்றம்... புது வேட்பாளர் யார்?

திமுக கூட்டணிக் கட்சியான கொ.ம.தே.க கட்சி தங்கள் நாமக்கல் தொகுதி வேட்பாளரை திடீரென மாற்றியுள்ளது.

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், வரும் ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எல்லாக் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிடுகிறது. சிபிஐ, ஐபிஎம், விசிக கட்சிகள் தலா 2 இடங்களிலும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொமதேக ஆகியவை தலா ஒரு இடங்களிலும் போட்டியிடுகின்றன.

நாமக்கல் தொகுதியை கொமதேக கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. முன்னதாக நாமக்கல் தொகுதிக்கு கொமதேக கட்சியின் சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திடீரென அவர் மாற்றப்படுள்ளார். இப்போது அதே கட்சியைச் சேர்ந்த வி.எஸ்.மாதேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow