போலி சித்த வைத்தியர் வீட்டில் தொடரும் போலீஸ் சோதனை

காவல்துறையினர் வீட்டின் சுற்று சுவர்களை இடித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Nov 24, 2023 - 17:24
Nov 25, 2023 - 11:46
போலி சித்த வைத்தியர் வீட்டில் தொடரும் போலீஸ் சோதனை

கும்பகோணம் அருகே போலி சித்த வைத்தியர் வீட்டில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், வேறு நபர்களை கொன்று வீட்டில் புதைத்து வைத்துள்ளாரா? என்ற கோணத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மணல்மேடு பகுதி சேர்ந்த அசோக்ராஜன் (27 ) என்ற இளைஞரை சோழபுரம் பகுதியை சேர்ந்த சித்த வைத்தியர் கேசவமூர்த்தி என்பவர் (47) என்பவர் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்டிருப்பது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது.இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் காணமல் போன இளைஞர்கள் குறித்தும் அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் கேசவமூர்த்தியின் வீட்டில் வேறு யாரும் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட உடல்கள் உள்ளதா? என்கிற கோணத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ்ராவத் தலைமையில் காவல்துறையினர் வீட்டின் சுற்று சுவர்களை இடித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தடயவியல் துறையினர் மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது.இந்த சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போலி சித்த வைத்தியர் இளைஞரை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் புதைத்து வைத்திருந்த சம்பவம் அப்பகுதிவாசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow