கனமழையால் 4 மாவட்ட பேருந்து பணிமனைகளில் ரூ.10 கோடி சேதம்

கன்னியாகுமரி, நெல்லை மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளதைத்தொடர்ந்து  அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.

Dec 22, 2023 - 15:35
Dec 26, 2023 - 12:51
கனமழையால் 4 மாவட்ட பேருந்து பணிமனைகளில் ரூ.10 கோடி  சேதம்

நெல்லை உள்பட 4 மாவட்ட  பணிமனையில் 10 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பொருட்கள் கனமழையால் சேதமடைந்து இருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட அதிகனமழையால் நெல்லை வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனைக்குள்  வெள்ளநீர் புகுந்து பல்வேறு தளவாட பொருட்கள் சேதம் அடைந்தது. 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பணிமனையை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் சேத விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், ”நெல்லை அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்குள் வெள்ளநீர் சுமார் 10 அடி உயரத்திற்கு நின்றுள்ளது. இதனால் பணிமனைக்குள் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இங்குள்ள நிர்வாக இயக்குனர் நெல்லை,தூத்துக்குடி, கன்னியாகுரி, தென்காசி உள்பட 4 மாவட்டங்களில்  10 கோடி ரூபாய் அளவில் சேதம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிதி ஒதுக்கப்படும்.

கன்னியாகுமரி, நெல்லை மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளதைத்தொடர்ந்து  அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதம் அடைந்துள்ளதால் தற்போது 55 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. சாலைகள் சரி செய்யப்பட்டவுடன் முழு அளவில் அங்கு பேருந்துகள் இயக்கப்படும்” என்றார்

இந்த ஆய்வின்போது தொ.மு.ச பேரவை செயலாளர் தர்மன் மற்றும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow