டர்..புர் .. வாயு பிரச்சினையா.. இந்த ஒரு பொடி போதும்.. அஜீரண கோளாறை அடித்து விரட்டும்
உணவே மருந்து என்ற காலம் போய் மருந்தே உணவு என்றாகி விட்டது.கண்ட நேரத்தில் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றை கெடுத்துக்கொள்கின்றனர். இளைய தலைமுறையினரின் உணவுப்பழக்கம் வயிற்றை குப்பைத்தொட்டியாக மாற்றி விடுகிறது.உணவு செரிமானம் ஆகாமல் வாயு கோளாறு, நெஞ்சு எரிச்சல் என பலவித பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். அஜீரண கோளாறுகளை போக்க என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ஒருசிலருக்கு வயிறு பிரச்சினை,வாய தொந்தரவு ஏற்படும். எப்போதாவது அஜீரணக் கோளாறு ஏற்பட்டால், அது பிரச்னை கிடையாது. ஆனால் முழு உணவு சாப்பிட்டபின் வயிறு வலி ஏற்பட்டாலோ, அதை நீங்கள் மாத்திரை சாப்பிட்டுத்தான் குணப்படுத்தவேண்டுமெனில், அது பிரச்னைதான்.
அடிக்கடி அஜீரணக் கோளாறு ஏற்பட்டால், நிறைய பிரச்னைகள் உள்ளது என்று பொருள். அல்சர் அல்லது அசிடிட்டி கோளாறு ஏற்பட்டால் கவனம் செலுத்துவது அவசியம்.அஜீரணக்கோளாறு என்பது வயிற்றில் வலி ஏற்படும். உங்களுக்கு வயிற்றில் வலியோ அல்லது வயிறு உப்புசமோ ஏற்பட்டால், உங்கள் செரிமானத்தில் ஏதோ பிரச்னை என்று பொருள். சில நேரங்களில் நீங்கள் தேவையில்லாதவற்றை சாப்பிடுவதாலும் கூட அஜீரண கோளாறுகள் ஏற்படும்.
செரிமானத்தால் பல்வேறு அறிகுறிகள் ஏற்படும். வயிற்று வலி அல்லது அசவுகர்யங்கள் ஏற்படும். வயிற்றில்தான் அனைத்து செரிமான உறுப்புகளும் உள்ளன. செரிமான கோளாறுகள் பொதுவாக சாப்பிட்ட பின்னர்தான் ஏற்படும்.
செரிமான கோளாறுகளின் அறிகுறிகள்:
எபிகேஸ்ட்ரிக் வலி – நடு வயிறு மற்றும் மேல் வயிற்றில் வலி ஏற்படும். நெஞ்சு எரிச்சல் – வயிறு முதல் நெஞ்சுப்பகுதி வரை எரிச்சல் ஏற்படும்.
சாப்பிட்ட பின் வயிறு உப்பிய உணர்வு ஏற்படும். வாயுத்தொல்லை,வாந்தி,ஆசிட் ரிப்ளக்ஸ்,நெஞ்செரிச்சல் போன்றவையும் அஜீரணக்கோளாறின் அறிகுறிகள் ஆகும்.
உங்களுக்கு இந்த அஜீரணக்கோளாறுகள் ஏற்படாமல் இருக்கவேண்டுமெனில், நீங்கள் வீட்டு மருத்துவ முறைகளைப் பின்பற்ற வேண்டும். அதில் ஒன்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. வயிற்றில் அதிகப்படியான வாயுவை உருவாக்க கூடிய குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கும் வாயு எதிர்ப்புப் பொருளாக செயல்படுகிறது பெருங்காயம். பல சுகாதார நிபுணர்கள், ஜீரணிக்க கடினமான உணவுகளில் கட்டாயம் பெருங்காயம் சேர்க்க பரிந்துரைக்கின்றனர். பெரும்பாலான வயிறு பிரச்சனைகளுக்கு உடனடியாக நிவாரணம் தருவதாக உள்ளது பெருங்காயம். வாயுவால் எப்போது அசௌகரியம் ஏற்பட்டாலும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் பெருங்காயம் கலந்து குடிப்பது உடனடி நிவாரணம் தரும். பெருங்காய நீரை அதிகம் குடித்தால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வாயு தொல்லையை சரி செய்ய தினமும் ஒரு நாளைக்கு ஒரு முறை ஒரு டீஸ்பூன் ஓம விதைகளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்.
அஜ்வைன் என்று குறிப்பிடப்படும் ஓமம் வாயு தொல்லைகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் நிவாரணம் அளிக்கிறது. ஓம விதைகளில் உள்ள தைமால் (Thymol) என்ற கலவை, செரிமானத்திற்கு உதவும் சாறுகளை இரைப்பை வெளியிட தூண்டுகிறது. மேலும் வாயுவால் ஏற்படும் வயிறு வலிக்கான நிவாரணத்தையும் ஓமம் அளிக்கிறது.
ஜீரணப்பொடி சாப்பிட்டால் அஜீரண கோளாறுகள் நீங்கும்.சுக்கு – 50 கிராம்,மிளகு – 50 கிராம்,சீரகம் – 50 கிராம்,வசம்பு – 50 கிராம்,ஓமம் – 50 கிராம், இந்துப்பு – 10 கிராம் எடுத்து சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவேண்டும். அனைத்தையும் தனித்தனியாக பொடி செய்துகொள்ளவேண்டும். பொடித்த அனைத்தையும் ஒன்றாக கலந்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும் இந்த பொடியை பகல் உணவுக்கு முன்னர் ஒரு ஸ்பூனும், மாலை 6 மணிக்கு ஒரு ஸ்பூனும் சாப்பிடவேண்டும்.
இந்த ஜீரணப்பொடியை 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்த அளவு எடுத்துக்கொள்ளவேண்டும்.பெரியவர்கள் மாதத்தில் ஒரு நாள் மூன்று முறை சாப்பிடவேணடும். அஜீரணக்கோளாறு சரியாகவில்லையென்றால், மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிடவேண்டும். இதை நீங்கள் வழக்கமாக எடுத்துக்கொண்டால் உங்களுக்கு அஜீரணக்கோளாறு ஏற்படாது.
பொது வெளியில் பலர் முன்னிலையில் வாயு தொல்லையால் அவதிப்படுவது என்பது நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு சங்கடமானது. டர் புர் என்ற சத்தத்தோடு வாயு பிரியும் போது பலர் சங்கடமாக உணர்வார்கள். அடிக்கடி வாயு தொல்லையால் அவதிப்படுவோர் தங்கள் டயட்டில் சில எளிய மாற்றங்கள் செய்தாலே நிவாரணம் கிடைக்கும். சரியான நேரத்தில் சரியான சத்தான உணவுகளை சாப்பிடவேண்டும். எண்ணெய் பலகாரங்கள், உருளை கிழங்கு, சிப்ஸ் வகைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
What's Your Reaction?