"எம்எல்ஏக்களுக்கு கார் என்றால் எங்களுக்கு பைக் வேணும்" ..... விஜய்யின் அடுத்த முடிவு என்ன?

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் என்றால் ஊராட்சி மன்றத் தலைவர்களான எங்களுக்கு இரு சக்கர வாகனம் வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை எழுந்துள்ளது.

Aug 21, 2026 - 20:52
"எம்எல்ஏக்களுக்கு கார் என்றால் எங்களுக்கு பைக் வேணும்" ..... விஜய்யின் அடுத்த முடிவு என்ன?

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் கடந்த புதன் கிழமை அன்று நடைபெற்ற சட்டசபையில் அறிவித்திருந்தார். மேலும் இதற்கு தனி உதவியாளர் மற்றும ஓட்டுநருக்கான ஊதியம் எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் ரூ 1 லட்சம் கூடுதலாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் இதற்கு அனைத்து  எம்எல்ஏக்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்கள் சார்பில் எம்எல்ஏக்களுக்கு கார் என்றால் ஊராட்சி தலைவர்களுக்கு இருசக்கர வாகனம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் குடிநீர் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்க வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் 16 வது  நிதிக்குழு மானியத்துக்கு நிர்வாக அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  அதனைத் தொடர்ந்து விபிஜி ராம்ஜி திட்டத்தில் 125 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து எம்எல்ஏக்களை விடவும் அதிகளவில் மக்கள் பணி  செய்வது ஊராட்சி மன்றத் தலைவர்கள் தான். மக்களை நேரடியாக நாள்தோறும் சந்திப்பவர்களும நாங்கள் தான். இரவு பகல் பாராமல், மழை வெயில் பாராமல் மக்களுக்காகப்  போராடும் ஊராட்சி மன்ற தலைவர்கள் எத்தனையே பேரிடம் இரு சக்கர வாகனம் கூட இல்லாமல் இருக்கின்றார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு கூட பேருந்தில் வர சூழ்நிலையில் உள்ளார்கள்.

எனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. அதே போல் மக்களுக்காக சுற்றி உழைக்கும் ஊராட்சி  பணிகளை செய்யும் எங்களுக்கு இரு சக்கர வாகனம் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.இதற்கு முதலமைச்சர் விஜய் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்று அனைவரும் மத்தியில் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

 

 

 






What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow