பட்டியலின பெண்ணுக்கு வழங்கப்பட்ட பதவி ரத்து..காரணம் என்ன?

திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கிய அரசாணையையும், ஊராட்சி மன்ற தலைவராக பட்டியலின பெண் தேர்வு செய்யப்பட்டதையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது  சென்னை உயர்நீதிமன்றம்.

Sep 20, 2024 - 11:58
பட்டியலின பெண்ணுக்கு வழங்கப்பட்ட பதவி ரத்து..காரணம் என்ன?

திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கிய அரசாணையையும், ஊராட்சி மன்ற தலைவராக பட்டியல் இனப் பெண் தேர்வு செய்யப்பட்டதையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது  சென்னை உயர் நீதிமன்றம்.

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலினத்தவருக்கு ஒத்துக்கப்பட்டதை எதிர்த்து அப்பகுதியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார், முன்னாள் வார்டு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

பட்டியலினத்தை சேர்ந்த ஒரு குடும்பம் கூட தங்கள் கிராமத்தில் இல்லாத நிலையில் நாயக்கநேரி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கோரி அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, “இந்த ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 440 வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஆனால் கிராம மக்கள் தொகையில் 66 சதவீதம் பழங்குடியினர் உள்ளனர். 34 சதவீதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தவர்கள் ஒருவர் கூட இந்த கிராமத்தில் இல்லை.”

“இருப்பினும் இந்துமதிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர்கள் மற்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும்போது ஒட்டுமொத்த மக்கள் தொகையின் விகிதாச்சார அடிப்படையில் தான் இடஓதுக்கீடு பின்பற்ற வேண்டும் என விதி உள்ளது. இருப்பினும் இங்கு முறையாகப் பின்பற்றப்படவில்லை ” என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை தீவிரமாக விசாரித்த நீதிபதிகள், நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவியை பொதுப் பிரிவை சேர்ந்த பெண் அல்லது பழங்குடியின பிரிவு  பெண்ணுக்கு நான்கு வாரங்களில் ஒதுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

மேலும், பதவி சரியான நபருக்கு ஒதுக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தி புதிய ஊராட்சி தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow