யாரும் உழைப்பதற்கு தயாராக இல்லை - கிராம சபை கூட்டத்தில் ஆதங்கப்பட்ட அமைச்சர் 

ஒரு ஊராட்சியில் இருந்து 4 லட்சம் ரூபாய் மட்டும்தான் அரசாங்கத்திற்கு வரியாக செலுத்துகிறோம். ஆனால் அரசாங்கத்தின் சார்பாக ஒரு ஊராட்சிக்கு 4 கோடியே 68 லட்சம் ரூபாய் நிதிகள் திட்டங்களாக வந்துள்ளது. 

Oct 2, 2024 - 16:34
 யாரும் உழைப்பதற்கு தயாராக இல்லை - கிராம சபை கூட்டத்தில் ஆதங்கப்பட்ட அமைச்சர் 
 யாரும் உழைப்பதற்கு தயாராக இல்லை - கிராம சபை கூட்டத்தில் ஆதங்கப்பட்ட அமைச்சர் 

இப்பொழுது யாரும் உழைப்பதற்கு தயாராக இல்லை என கிராம சபை கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே மேலபட்டமங்களம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டார். பின்னர் பொதுமக்களிடையே பேசிய அவர்,  “இன்றைக்கு கிராமங்களில் அடிப்படை வசதிகள் நிரம்பி இருக்கிற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்றார்.

ஒரு ஊராட்சியில் இருந்து 4 லட்சம் ரூபாய் மட்டும்தான் அரசாங்கத்திற்கு வரியாக செலுத்துகிறோம். ஆனால் அரசாங்கத்தின் சார்பாக ஒரு ஊராட்சிக்கு 4 கோடியே 68 லட்சம் ரூபாய் நிதிகள் திட்டங்களாக வந்துள்ளது. 

நம்முடைய பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி, இப்பொழுது யாரும் உழைப்பதற்கு தயாராக இல்லை. மிஞ்சிப் போனால் நூறு நாள் வேலைக்கு போறதுக்கு தயாரா இருக்கிறோம். பெண்களை பொறுத்த வரை அது ஒரு வழியில் தடை இல்லாம வந்துகிட்டு இருக்கு. எனது ஊர் அரளிக்கோட்டை இரண்டு போகம் விளையக்கூடியது. ஆனால் இன்று ஏதோ அத்தி பூத்தார் போல் ஒரு சில இடங்களில் மட்டும் விவசாயம் செய்கிறார்கள், மற்ற இடங்கள் எல்லாம் கருவேல மரங்கள் மண்டி கிடைக்கிறது. ஆக நம்மளை பொறுத்தவரை உழைப்பதற்கு யாரும் தயாராக இல்லை என்றார்.

இந்தியாவில் விவசாயத்திற்காக இலவசமாக முதலில் மின்சாரம் தந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்றார். நிகழ்ச்சி முடிவில் பாலியல் தொந்தரவுக்கு எதிரான உறுதிமொழியை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர் ஆகியோருடன் இணைந்து பொதுமக்களும் எடுத்துக்கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow