இந்திய-சீன படை திரும்பப்பெறும் நடவடிக்கை நிறைவு

கிழக்கு லடாக்கில் இந்தியா - சீனா எல்லையில் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவுற்ற நிலையில், தீபாவளியையொட்டி இன்று இரு படையினரும் இனிப்புகளை பரிமாறிக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Oct 31, 2024 - 08:15

கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் நுழைய முயன்றதாக கூறப்படும் நிலையில், இரு நாட்டுப் படைகளும் அங்கு குவிக்கப்பட்டன. தொடர்ந்து பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜி-ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்திப்பதற்கு முன்னதாக, இரு நாட்டுப் படைகளும் விரைவில் விலக்கிக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 4 ஆண்டுகளுக்குப்பின் கிழக்கு லடாக்கில் இந்தியா - சீனா எல்லையில் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று இருநாட்டுப் படையினரும் இனிப்புகள் பரிமாறிக் கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நேரடி விமான சேவையை விரைவில் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து எல்லைகளில் வழக்கம் போல் ராணுவத்தினர் மீண்டும் ரோந்துப் பணி மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow