"என்னது ஏ பெயர் இல்லையா?" வாக்காளர் பெயரை சேர்க்க இதை முதல் செய்யுங்க...

தமிழகத்தில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. இதில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் பெயர் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்க்க படிவம் 6-ஆரை பூர்த்தி செய்து வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

 "என்னது ஏ பெயர் இல்லையா?" வாக்காளர் பெயரை சேர்க்க இதை முதல் செய்யுங்க...
To add the voter's name

தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி அலுவலரிடமும் அந்தந்த தொகுதி பட்டியல் இருக்கும். எனினும் ஆன்லைன் மூலமாகவும் வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய முடியும். https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்தில் உங்களுடைய வாக்காளர் அடையாள எண்ணை உள்ளிட்டு அறியலாம். உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள், மொபைல் எண் கொண்டும் தெரிந்துகொள்ளலாம்.

https://elections.tn.gov.in/index.aspx என்ற தமிழக தேர்தல் ஆணைய பக்கத்தில் காணலாம். 'சிறப்பு தீவிர திருத்தம் 2026'(Special Intensive Revision 2026) என்ற இணைப்பை அழுத்தினால் அதன்பின் வரும் திரையில் உங்களுடைய மாவட்டம், தொகுதியைத் தேர்வு செய்தால் நீக்கப்பட்டவர்களின் விவரங்கள் பட்டியலாக கிடைக்கிறது.

மீண்டும் பெயர் சேர்க்க என்ன செய்ய வேண்டும் 

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் படிவம் 6-ஐப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இதற்கு ஆன்லைன் மூலமாகமோ உங்களுடைய வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவத்தைப் பெற்றும் நிரப்பிக் கொடுக்கலாம். புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைய படிவம் 6-யை ஜனவரி 18 ஆம் தேதிக்குள் நிரப்பி கொடுக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்களைச் சேர்க்க அந்தந்த வாக்குச்சாவடிகளில் வருகிற டிச. 20, 21 ஆம் தேதிகளில் முகாம் நடத்தப்பட உள்ளது. இதனையும் மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் படிவம் 7 - வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க (இடம் மாறுதல் அல்லது இறப்பு). படிவம் 8 - பெயர், வயது, முகவரி மாற்றத்திற்கு.

படிவம் 8ஏ - உங்களுடைய பெயரை வேறு சட்டமன்றத் தொகுதிக்கு மாற்றுவதற்கு வாக்குச்சாவடி அலுவலர்களால் வழங்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இறுதி வாக்காளா் பட்டியல் பிப். 17-ஆம் தேதி வெளியிடப்படும். இதன்பிறகு எந்த திருத்தமும் மேற்கொள்ள முடியதுக்கே என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow