பட்டாக் கத்தியை காட்டி மிரட்டல்.. பாமக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்

பென்னாகரம் அருகே ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினரை, பட்டாக் கத்த்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த பாமக நிர்வாகி கைது-பட்டாக் கத்தி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்

Sep 19, 2024 - 13:43
Sep 19, 2024 - 13:54
பட்டாக் கத்தியை காட்டி மிரட்டல்.. பாமக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்

பென்னாகரம் அருகே ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினரை, பட்டாக் கத்த்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த பாமக நிர்வாகி கைது-பட்டாக் கத்தி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடி பகுதியில் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கூத்தப்பாடி பகுதியில் ஒரு சில தெருக்களில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என அந்தப் பகுதி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் புகழேந்தியிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அப்போது மது போதையில் அங்கு வந்த பாமக நிர்வாகி எல்லப்பன், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் புகழேந்தியிடம் தகராறு செய்துள்ளார். அப்பொழுது கடும் வாக்குவாதத்திற்கு இடையே எல்லப்பன் தனது வீட்டில் இருந்து 5 அடி நீளம் கொண்ட பட்டா கத்தியை எடுத்து வந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

பாமக நிர்வாகி பட்டாக் கத்தியை காட்டி, வார்டு உறுப்பினரை கொலை மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து ஒகேனக்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினரை பட்டாக்கத்தி காண்பித்து விரட்டிய பாமக நிர்வாகியின் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இது குறித்து போலீஸார் அவரிடம் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்  ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினரை பாமக நிர்வாகி கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பென்னாகரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow