சாராயம் குடித்து இறந்தால் ரூ.20 லட்சம்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நிதியும் வழங்கவில்லை - அர்ஜூன் சம்பத்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு அரசு எந்த இழப்பீடும் வழங்கவில்லை என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்சாட்டி உள்ளார்.

Dec 3, 2024 - 19:34
Dec 3, 2024 - 19:36
சாராயம் குடித்து இறந்தால் ரூ.20 லட்சம்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நிதியும் வழங்கவில்லை - அர்ஜூன் சம்பத்
அரசு எந்த இழப்பீடும் வழங்கவில்லை - அர்ஜூன் சம்பத்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேமலைகவுண்டன்பாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினறும் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், “தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் அதிகளவு கொலைகள் தொடர்கதையாகி வருகிறது.

காவல்துறையினர் உடனடியாக அவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும். அதேபோல் கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களுக்கு 20 லட்சம் இழப்பீடு வழங்கிய அரசு, கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் இழப்பீடு வழங்கவில்லை” என கேள்வி எழுப்பினார்.

மேலும், சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் காவல்துறையினர் விரைவில் குற்றவாளிகளை கண்டறிந்து தகுந்த நடவடிக்கையை கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow