புதிய கட்சியை தொடங்கிய பிரசாந்த் கிஷோர் - பீகார் அரசியலில் புதிய திருப்பம்

பீகாரில் தனது ஆட்சி அமைந்தால் மதுவிலக்கு ரத்து செய்யப்படும் என்றும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.

Oct 2, 2024 - 20:15
புதிய கட்சியை தொடங்கிய பிரசாந்த் கிஷோர் - பீகார் அரசியலில் புதிய திருப்பம்

தேர்தல் வியூகங்களை வகுக்கும் பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்னும் புதிய அரசியல் கட்சியை தொடங்கிய உள்ளார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். இவர் அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுக்கும் பணியை மேற்கொண்டு வந்தார்.குறிப்பாக பாஜக, திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார்.அதன்பின்னர் பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகம் வகுக்கும் பணியை கைவிட்டார். தொடர்ந்து பீகார் மாநிலத்தின் மீது தனது முழு கவனத்தையும் செலுத்தினார். மேலும் பீகார் மாநிலத்தை மையப்படுத்தி தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்தார். 

இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.இதையொட்டி, பிரசாந்த் கிஷோர், காந்தி ஜெயந்தியான இன்று ‘ஜன் சுராஜ்’ என்ற அரசியல் கட்சியை அறிவித்துள்ளார். மேலும் பீகாரில் தனது ஆட்சி அமைந்தால் மதுவிலக்கு ரத்து செய்யப்படும் என்றும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்றும் என்றும் அறிவித்துள்ளார்.மேலும் 30 ஆண்டுகளாக ஆர்.ஜே.டி மற்றும் பாஜகவுக்கு மக்கள் மாறிமாறி வாக்களித்து வருகின்றனர். 

மாற்று அரசியலை கொண்டு வரவே வந்துள்ளேன்.மாற்று அரசியல் என்பது வாரிசு அரசியலாக இருக்கக்கூடாது. மேலும் அடுத்தாண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி போட்டியிடும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் பீகார் அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது தேர்தல் வாக்குப்பதிவின் போது தெரியவரும். 

முன்னதாக பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் செல்லும் நிலை உள்ளது. இது தமது ஆட்சி அமைந்தால் தொழிலாளர்கள் அனைவரும் பீகாரிலேயே வேலை செய்யும் நிலை உருவாக்கப்படும் என பிரசாந்த் கிஷோர் முன்னதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow