ஜெகன்மோகன் ரெட்டி புகைப்படத்துடன் 5,000 சேலைகளை கைப்பற்றிய தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள்...
ஆந்திர மாநிலம் குண்டூரில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் புகைப்படம் கொண்ட புடவைகளை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் கைப்பற்றினர்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஆந்திர மாநிலம் குண்டூரில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் புகைப்படம் கொண்ட புடவைகளை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் கைப்பற்றினர்.
2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக எந்த அரசியல் கட்சியும் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சத்தெனபள்ளி என்ற கிராமத்தின் அருகில் பாரிசராமிக வாடா என்ற பகுதியில் முன்கூட்டியே கிடைத்த தகவலுடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது அந்தப் பகுதியில் உள்ள ஒரு குடோனில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் புகைப்படத்துடன் கூடிய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெண் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை நடத்தி சேலைகளை கைப்பற்றினர்.
What's Your Reaction?