டெஸ்ட் கிரிகெட்டில் புதிய சாதனை படைத்தார் அஷ்வின்
இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போட்டியில் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் கிரிகெட்டில் ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் ரவிச்சந்திரன் அஷ்வின்.
தற்போதைய நிலவரப்படி டெஸ்ட் கிரிகெட்டில் உலகின் நம்பர் 1 பவுலராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஷ்வின். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்திய பிறகு நம்பர் 1 ஆல்ரவுண்டராகவும் திகழ்கிறார். இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நஜ்முல் ஹுசைன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் முன்னாள் இந்திய வீரர் அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்திருக்கிறார்.
ஆசியக் கண்டத்தில் டெஸ்ட் கிரிகெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 612 விக்கெட்டுகளை எடுத்து இலங்க கிரிகெட் வீரர் முத்தையா முரளிதரன் இருக்கிறார். இதற்கு அடுத்த இடத்தில் இந்திய கிரிகெட்டின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே 419 விக்கெட்டுகளை எடுத்து இரண்டாம் இடத்தில் இருந்தார். இன்று அஷ்வின் தனது 420வது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் கும்ப்ளேவைப் பின்னுக்குத் தள்ளி ஆசிய அளவில் இரண்டாம் வீரராக இருக்கிறார்.
அனில் கும்ப்ளேவை மிஞ்சியதால் ஆசியக்கண்டத்தில் டெஸ்ட் கிரிகெட்டில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய வீரர் என்கிற பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார் அஷ்வின். இதன் மூலம் டெஸ்ட் கிரிகெட்டில் தன்னை ஒரு ஜாம்பவனாக முன்னிறுத்திக் கொண்டுள்ளார் அஷ்வின்.
அதிக டெஸ்ட் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 612 விகெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் முதலிடத்திலும், 420 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீரர் அஷ்வின் இரண்டாம் இடத்திலும், 419 விக்கெட்டுகளோடு இந்திய வீரர் அனில் கும்ப்ளே மூன்றாம் இடத்திலும், 354 விக்கெட்டுகளோட் இலங்கை வீரர் ரங்கனா ஹெராத் நான்காம் இடத்திலும், 300 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீரர் ஹர்பஜன் சிங் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.
What's Your Reaction?