6 வயது சிறுமி கொலை - பள்ளித் தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது
குஜராத்தில் 6 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று பின்னர் கொலை செய்த பள்ளித் தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தின் தாவூத் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் துர்வாடை எழவே அங்கு சோதனை நடத்தியதில் 6 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த சடலத்தைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்து பார்க்கையில் அந்தச் சிறுமி முச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து அச்சிறுமியின் பெற்றோரிடம் விசாரிக்கையில், உயிரிழந்த சிறுமியின் தாயார் அச்சிறுமி அன்றைய தினம் அவள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசியர் கோவிந்த் நாத்துடன் சென்றதாகக் கூறியுள்ளார்.
சந்தேகமடந்த காவல் துறையினர் இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் விசாரிக்கையில் அவர், அச்சிறுமியை பள்ளி வளாகத்திலேயே இறக்கிவிட்டுச் சென்றதாகத் தெரிவித்தார். அவரிடமிருந்து வந்த பதில்கள் நம்பும்படியாக இல்லாததால் சந்தேகமடைந்த காவல் துறையினர் தலைமை ஆசிரியரிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். விசாரணையின் தீவிரத்தால் தலைமை ஆசிரியரால் ஒருகட்டத்துக்கு மேல் சமாளிக்க முடியாமல் உண்மையை ஒப்புக்கொண்டார்.
தலைமை ஆசிரியர் கோவிந்த்நாத் கொடுத்த வாக்குமூலத்தில், செப்டம்பர் 19ம் தேதி கோவிந்த்நாத் இறந்த இச்சிறுமியை அவளது வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளார். பள்ளிக்குச் செல்லும் வழியில் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் சிறுமி கத்தி கூச்சல் போட்டதையடுத்து, அவளை அமர்த்துவதற்காக கழுத்தை நெரித்ததில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் சிறுமியின் உடலை காரிலேயே வைத்துவிட்டு பள்ளிக்குச் சென்றுள்ளார். மாலை 5 மணியளவில் பள்ளி முடிந்த பிறகு பள்ளியில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியின் புத்தகப்பை மற்றும் காலணிகளை வகுப்பறையில் போட்டுள்ளார். சிறுமியின் சடலத்தைப் பள்ளியின் பின்புறத்தில் வீசிவிட்டுச் சென்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து கோவிந்த்நாத்தை காவல்துறையினர் சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போக்சோ வழக்கின் கீழ் கைது செய்தனர்.
What's Your Reaction?