"அதிமுக கூடாரம் விரைவில் காலியாகும்"....அடித்துச் சொன்ன செம்மலை!
அதிமுகவிலிருந்து விலகி நேற்று தவெக சார்பில் தாராபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, விஜய் முன்னிலையில் செம்மலை தன்னை இணைந்து கொண்டுள்ள நிலையில், அதன் பிறகு அதிமுகவை விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் செம்மலை 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகவும்,1984 தேர்தலில் அதிமுகவின் கழக வேட்பாளராகவும் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஓமலூர் தொகுதியிலிருந்து 2001 தேர்தலில் அதிமுக வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். அதனைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சேலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
அதிமுகவிலிருந்து விலகிய செம்மலை
இப்படி அதிமுகவில் தீவிரமான தொண்டனாகவும், பொதுச்செயலாளரின் வழிக்காட்டியாகவும் இருந்து வந்த நிலையில், 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிமுக இயக்கத்தில் சரியான தலைமை அமையவில்லை. அது மட்டுமல்ல இன்றைக்கு அந்த கட்சி பழனிசாமிக்கு சொந்தமான லிமிடெட் கம்பெனி ஆகிவிட்டது. உழைப்பவர்களுக்கு அங்கு மரியாதை இல்லை என்றும், அதனால் தான் பலர் அந்த இயக்கத்திலிருந்து வெளியேற்றம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
தற்போது அந்த இயக்கத்தில் இருந்து கொண்டிருக்கின்ற சிலரும் தங்கள் உழைப்பு வீணாகிறதே என்ற மனநிலையில் இருந்து வருகின்றனர். அவர்களும் விரைவில் விலகி விடுவார்கள் என்றும், இப்படி நடந்தால் எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களால் கட்டி காப்பாற்றபட்ட இயக்கம் கூடிய விரைவில், இந்த கூடாரம் காலியாகி விடும் என்றும், குளம் வற்றிய பிறகு கொக்குக்கு என்ன வேலை என்ற நிலைதான் பழனிசாமி நிலையாகும் என்று தவெகவில் இணைந்த பிறகு செம்மலை அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தவெகவில் இணைந்த செம்மலை
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று நடந்த இடைத்தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் த.வெ.க. தலைவரும், முதலமைச்சருமான விஜய் முன்னிலையில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மூத்த தலைவருமான செம்மலை த.வெ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு முதலமைச்சர் விஜய், த.வெ.க.வின் கட்சித் துண்டை அணிவித்து வரவேற்றார்.
தவெகவில் இணைந்த பிறகு முதலமைச்சர் விஜய் குறித்து செம்மலை
த.வெ.க.வில் இணைந்த செம்மலை, தமிழக வெற்றிக் கழகத்தில் நான் கால தாமதமாக சேர்ந்திருந்தாலும் ஏற்கனவே எடுத்த முடிவு தான். த.வெ.க. வெற்றி தலைவர் விஜய் ஒரு நல்ல மனிதர், தன்னலமற்ற தலைவர், தலைமைக்கான பண்புகள் நிறைந்த தலைவர். ஒவ்வொரு குடும்பத்திலும் தன்னையும் ஒரு உறுப்பினராக கருதும் அளவுக்கு தமிழ்நாட்டு மக்களின் மனதில் இடம் பிடித்தவர். இயல்பான அவரது இந்த குணநலன்கள் என்னை கவர்ந்தன. அதைவிட இன்றைக்கும் அறிஞர் அண்ணா மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரை தனது வழிகாட்டு தலைவர்கள் என்று பிரகடனப்படுத்தினாரோ அன்றைக்கு அவரால் ஈர்க்கப்பட்டேன்.
ஊழலை ஒழிப்பேன் சொன்ன விஜய்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யால் மட்டுமே ஆட்சி முறையில் ஊழலை ஒழிப்பேன், லஞ்சம் கட்டுப்படுத்துவேன், முறைகேடுகளை களைவேன் என்று தைரியமாக சொல்ல முடியும். மற்ற தலைவர்களால் இந்த வாக்குறுதி மக்களுக்கு அளிக்க முடியாது. இவைகள் தான் த.வெ.க வெற்றி தலைவர் விஜய் தலைமையை ஏற்றுக் கொண்டதற்கு காரணங்களாகும்.
What's Your Reaction?



