எமர்ஜென்சி படத்துக்கு முட்டுக்கட்டை போடும் சென்சார் போர்டு
கங்கணா ரணாவத் நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்படத்தில் 13 இடங்களில் திருத்தம் செய்தால்தான் தணிக்கை சான்றிதழ் வழங்க முடியும் என சென்சார் போர்டு தெரிவித்திருக்கிறது. அவர்கள் கோரும் திருத்தம் நியாயமற்றது என கங்கணா ரணாவத் தெரிவித்திருக்கிறார்.
பாலிவுட் நடிகையும் பாஜக எம்.பியுமான கங்கணா ரணாவத் இயக்கி நடித்துள்ள திரைப்படம்தான் எமர்ஜென்சி. முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி காலத்தில் கொண்டு வரப்பட்ட எமர்ஜென்பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ள எமர்ஜென்சியை மையமாக வைத்து இத்திரைப்படத்தை இயக்கியிருக்கும் கங்கனா இந்திரா காந்தி வேடத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்துக்கான அறிவிப்பு வந்ததில் இருந்தே பல்வேறு எதிர்ப்புகளைச் சந்த்தித்து வருகிறது. குறிப்பாக சீக்கியர்களை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் இப்படம் வெளியாவதில் நிறைய சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இம்மாதம் 6ம் தேதியே படம் வெளியாவதாக இருந்த நிலையில் சென்சார் போர்டு சான்றிதழ் வழங்காததால் வெளியீடு தள்ளிப் போனது. சென்சார் போர்டு சான்றிதழ் வழங்காததை எதிர்த்து கங்கணா ரணாவத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்த ஜீ டிவி நிர்வாகம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் சென்சார் போர்டு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அபினவ் சந்திரசூட் “எமர்ஜென்சி படத்தில் 13 இடங்களில் திருத்தம் செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளோம். அவற்றுள் 4 இடங்களில் வெட்டும்படியும், 3 இடங்களில் திருத்தம் செய்யும்படியும், 6 இடங்களில் புதிதாக சேர்க்கும்படியும் கூறி இருக்கிறோம். சொன்ன திருத்தங்களை செய்து முடித்தால் எமர்ஜென்சி திரைப்படத்துக்கு யு.ஏ சான்றிதழ் வழங்கப்படும்.
படத்தில் சீக்கியர்கள் அல்லாதவர்களை சீக்கியர்கள் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சிகளை சஞ்சய் காந்தி மற்றும் ஜெயில் சிங் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் சில வார்த்தைகளில் திருத்தம் செய்யும்படி கூறி இருக்கிறோம். சீக்கிய அமைப்புகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்சார் போர்டு முடிவை எதிர்த்து 30 நாட்ளுக்குள் மேல்முறையீடு செய்யலாம்'' என்று தெரிவித்தார்.
இத்திரைப்படத்தைக் கொண்டு வருவதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் கங்கணா ரணாவத் சென்சார் போர்டு கூறியிருக்கும் திருத்தங்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருப்பதாகக் கூறியிருக்கிறார். “சென்சார் போர்டு தெரிவித்த சில பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கின்றன. அவர்கள் மேற்கொள்ளச்சொல்லும் சில திருத்தங்கள் நியாயமற்றது.
அத்திருத்தங்களை மேற்கொண்டால் இத்திரைப்படத்தின் நம்பகத்தன்மை பறிபோய்விடும். ஆகவேதான் அதனைக் காக்கும் உறுதியோடு போராடிக் கொண்டிருக்கிறோம். உண்மைத் தன்மையிலிருந்து சிறுதும் விலகாத இத்திரைப்படத்தைப் பார்த்த வரலாற்று ஆய்வாளர்கள் உட்பட பலரும் இப்படத்தை பாராட்டி உள்ளனர். அப்படியிருக்க இத்தனை திருத்தங்களை செய்யச் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இதற்காக எந்த எல்லைக்கும் சென்று போராடத் தயாராக இருக்கிறோம்” என்று கங்கணா கூறியிருக்கிறார்.
What's Your Reaction?