வேட்டையனில் ரஜினிக்கு மனைவியாக மஞ்சுவாரியார்.. கேரக்டர் பெயர் என்ன தெரியுமா?
வேட்டையன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் மஞ்சுவாரியார் கதாபாத்திரன் பெயர் வெளியாகியுள்ளது. ரஜினியுடன் இணைவது இரட்டை சந்தோஷத்தை கொடுத்ததாக மஞ்சு வாரியர் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அமிதாப் பச்சன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள நிலையில் படத்தை ஜெய் பீம் புகழ் டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார்.படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் பெயர்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.மஞ்சுவாரியார் கதாபாத்திரத்தின் பெயர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
வேட்டையன் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். படத்தின் இசை வெளியீடு வரும் 20ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளதாக லைகா நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் ரிலீசாகவுள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்தப் படத்தின் அடுத்தடுத்த கேரக்டர்களை அறிமுகப்படுத்த உள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த அறிமுகம் அடுத்த ஒரு வாரத்திற்கு நடக்கவுள்ளதாகவும் கூறியிருந்த நிலையில், நேற்றைய தினம் படத்தில் ரித்திகா சிங்கின் கேரக்டர் அறிமுகம் செய்யப்பட்டது. வேட்டையன் படத்தில் ரூபா என்ற கேரக்டரில் ரித்திகா சிங் நடித்துள்ளார். காவல்துறை அதிகாரியாக ரித்திகா சிங் நடித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து நடிகை துஷரா விஜயன் கதாபாத்திரத்தை படக்குழு வெளியிட்டது. அந்த வகையில், நடிகை துஷாரா விஜயன் இதில் சரண்யா என்ற கேரக்டரில் நடிக்கிறார்.
ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கும் மஞ்சுவாரியாரின் கதாபாத்திரத்தின் பெயர் இன்று வெளியிடப்பட்டது. தாரா என்ற பெயரின் நடிக்கிறார் மஞ்சுவாரியார். இந்த படத்தில் தான் ரஜினியின் மனைவியாக நடித்துள்ளதாகவும் தன்னுடைய கேரக்டர் பெயர் தாரா என்றும் மஞ்சு வாரியர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் Vloggerஆக தான் நடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வேட்டையன் படத்தில் தனக்கு மிகவும் அழுத்தமான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தன்னிடம் இந்த கேரக்டர் குறித்து ஞானவேல் பேசியபோது, தனக்கு ரஜினியுடன் இணைவதும் இரட்டை சந்தோஷத்தை கொடுத்ததாகவும் மஞ்சு வாரியர் கூறியுள்ளார்.
அனிருத் இசையில் வேட்டையன் படத்தின் பாடல்களும் ஜெயிலர் படத்தை போலவே அமையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த 9ம் தேதி வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மாஸாக அமைந்துள்ளது.படத்தின் பாடல் வெளியீட்டு விழா 20ஆம் தேதி நடைபெறும் என்று பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?