மக்களே உஷார்! ஜூலையிலும் கொளுத்தும் வெயில்... வானிலை மையம் அலர்ட்!
தமிழகத்தில் ஜுலை மாதம் வெப்பநிலை இயல்பை விடவும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவழை தீவிரமடைந்தாலும் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகள் வழக்கத்திற்கு மாறாக உயரம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர் மற்றும் மதுரை, ஆகிய உள் மாவட்டங்களில் பகல் நேரத்தில் வெப்பநிலை அதிகமாக (சுமார் 40° C முதல் 44° C வரை) இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதே நேரம் சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை ஓரளவு குறைவாக இருந்தாலும் கடுமையான வெப்பநிலையும் அதனுடன் அதிகப்படியான ஈரப்பதமும் நிலவும் வாய்ப்புகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் வெப்பநிலை இயல்பை விடவும் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
வழக்கமாக கடுமையான கோடை வெயிலின் தாக்கம் மே மாத்திலேயே முடிவடையும். ஆனால் இந்த ஆண்டு ஜுலை மாதம் வரை நீடிக்கும் என்று கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து எல் நினோ, குறைவான பருவமழை மற்றும் மேகமூட்டமின்மை வலுவான மேற்குத் திசைக் காற்று உள்ளிட்டவை வெயில் அதிகரிப்புக்கு காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?