மேஷ ராசிக்கான தமிழ்ப்புத்தாண்டு ராசிபலன்: தேடி வரும் பதவியும்.. ஊதிய உயர்வும்

மேஷ ராசியினருக்கான தமிழ்ப்புத்தாண்டு பலன், பரிகாரங்களை துல்லியமாக கணித்து குமுதம் வாசகர்களுக்காக வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

Apr 7, 2025 - 17:50
Apr 7, 2025 - 17:51
மேஷ ராசிக்கான தமிழ்ப்புத்தாண்டு ராசிபலன்: தேடி வரும் பதவியும்.. ஊதிய உயர்வும்
tamil puthandu 2025 rasi palan of mesham rasi

மங்களகரமான தமிழ்ப்புத்தாண்டான விஸ்வாவசு வருடம் ஜோதிடக் கணக்குகளின்படி 13.4.2025 அன்று நள்ளிரவு 2.58 மணிக்குப் பிறக்கிறது. அதேசமயம் 14.4.2025 அன்றே தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில் அமையக்கூடிய கிரஹ நிலைகள் மற்றும் இந்தத் தமிழ்ப் புத்தாண்டில் நிகழவிருக்கும் ராகு, கேது மற்றும் குரு, சனி பெயர்ச்சிகளின் அடிப்படையில் மேஷ ராசியினருக்கான பலன், பரிகாரங்களை துல்லியமாக கணித்து குமுதம் வாசகர்களுக்காக வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. 

மேஷ ராசியினருக்கான தமிழ் புத்தாண்டு பலன் விவரங்கள் பின்வருமாறு-

மேஷம்: எண்ணம் போல் ஏற்றமும் மாற்றமும் ஏற்படக் கூடிய ஆண்டு. பணியிடத்தில் உங்கள் திறமை பேசப்படும். சிலருக்குப் புதிய பொறுப்புகளும் அதனால் மேன்மைகளும் ஏற்படும். எந்த சமயத்திலும் திட்டமிட்டும், நேரம் தவறாமலும் செய்தால் மனம்போல இடமாற்றம், பதவி, ஊதிய உயர்வுகள் கைகூடும்.

வீட்டில் நிம்மதி நிலவும். வாரிசுகளால் பெருமை ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனக்கசப்புகள் மறையும். விலகியிருந்த உறவுகள் திரும்ப வரும். மனம்விட்டுப் பேசினால், மங்கள காரியங்கள் கைகூடும். வீடு, வாகனம் மாற்ற புதுப்பிக்க சந்தர்ப்பம் உண்டு. செய்யும் தொழிலில் லாபச் சக்கரம் சீராகச் சுழல ஆரம்பிக்கும். அரசு அனுமதி தடை நீங்கிக் கைகூடும். 

மாணவர்கள் திட்டமிட்டுப் படித்தால் திறமைகளை வெளிப்படுத்தலாம். வகுப்பில் கவனச் சிதறல் கூடவே கூடாது. அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு பலகாலக் கனவுகள் நனவாகும். கலை, படைப்புத் துறையினர் சுணக்கம் தவிர்த்து செயல்பட்டால் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். பயணப்பாதையில் பிறர் தரும் உணவு, பானங்களைத் தவிருங்கள். முதுகு, கழுத்து, அஜீரணம் உபாதைகள் வரலாம். 

தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்வது முக்கியம். வைத்தீஸ்வரன் கோயில் முத்துக் குமாரஸ்வாமியை தினமும் மனதார வணங்குங்கள். வாழ்க்கை வசந்தமாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow