குரு பெயர்ச்சி பலன் 2024: குபேர யோகம் தரும் குரு பெயர்ச்சி.. பலனடையப்போகும் ராசிக்காரர்கள்

குரு பெயர்ச்சி நிகழும் மங்களகரமாக குரோதி ஆண்டில் சித்திரை 18ஆம் நாள் மே 1ஆம் தேதி நிகழப்போகிறது. குரு பகவான் ரிஷப ராசியில் அமர்ந்து ஐந்து, ஏழு, ஓன்பதாம் பார்வையாக கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகளை பார்க்கிறார். குருவின் சஞ்சாரம், குருவின் பார்வையை பொருத்து மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்

Apr 17, 2024 - 16:26
Apr 23, 2024 - 16:29
குரு பெயர்ச்சி பலன் 2024: குபேர யோகம் தரும் குரு பெயர்ச்சி.. பலனடையப்போகும் ராசிக்காரர்கள்


மேஷம் -   உங்கள் ராசியில் அமர்ந்து ஓராண்டு காலம் பயணம் செய்த குரு பகவான் வரும் மே 1ஆம் தேதி முதல் தனம், குடும்ப வாக்கு ஸ்தானத்தில் அமரப்போகிறார்.  அதிர்ஷ்டகரமான குரு பெயர்ச்சியாக அமையப்போகிறது. நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பணம் வீடு தேடி வரும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரப்போகிறது. 

ரிஷபம்:  குருபகவான் மே 1ஆம் தேதி முதல் உங்கள் ராசியில் அமர்ந்து ஓராண்டு காலம் பயணம் செய்யப்போகிறார். ஜென்ம குரு வனத்தினிலே என்று சொல்வார்கள் பயப்பட வேண்டாம்.  குருவின் பார்வையால் உங்களுக்கு  திருமணம் கை கூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

மிதுனம்:  குரு பகவான் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் ஆண்டு முழுவதும் பண வருமானம் அதிகரிக்கும். உங்களுக்கு  சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.  குரு பார்வையால்  நோய்கள் தீரும் கடன்கள் அடைபடும் காலம் வந்து நீங்கும் காலம் விட்டது. 

கடகம்:  உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்யப்போகிறார்.  திருமணம் நடைபெறும். குழந்தைக்காக காத்திருப்பவர்களின் வீட்டில் மழலை சத்தம் கேட்கும் நேரம் வந்து விட்டது. குரு பார்வையால் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.  வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும்.

சிம்மம்: குரு பகவான் உங்களுடைய ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் அமரப்போகிறார்.  பத்தில் குரு பதவி யோகத்தை தரப்போகிறார். எவ்வளவு பணம் வந்தாலும் கூடவே செலவுகளும் அதிகரிக்கும்.  சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

கன்னி:   பாக்ய ஸ்தான குருவினால் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும். குருவின் பார்வையால் செய்யும் தொழிலில் முன்னேற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். சமூகத்தில்  நல்ல மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும்.  நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். 

துலாம்:  அஷ்டம குருவினால் கஷ்டங்கள் நீங்கும்.  வேலை விசயத்தில் கவனம் தேவை. இருக்கிற பதவியை தக்க வைத்துக்கொள்ளுங்கள். பண வருமானம் அதிகரிக்கும். மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

விருச்சிகம்:  குரு பகவான் ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தான குருவாக பயணம் செய்யப்போகிறார். மே 1ஆம் தேதிக்கு மேல் குருபகவானின் நேரடிப்பார்வை உங்களுடைய ராசியின் மீது விழுகிறது. பணம் பொருள் செல்வம் தேடி வரும். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும்.   சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். புகழ், செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும்.  

தனுசு  ஆறாம் வீடான நோய் ஸ்தானத்தில் அமரப்போகும் குரு பகவானால் கடன்கள் அதிகரிக்கும் சுப விரைய செலவுகள் ஏற்படும். மருத்துவ செலவுகள் வரலாம். எதிரிகளிடம் இருந்து  இருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. குரு பகவான் பார்வையால் புதிய வேலை கிடைக்கும். வேலையில் இருந்த சங்கடங்கள் தீரும் பண வருமானம் பல வழிகளில் இருந்தும் தேடி வரும். 

மகரம்:   உங்களுடைய ராசிக்கு பூர்வ புண்ணியத்தில் அமரப்போகும் குருவினால் குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். குருவின் பார்வை ஆண்டு முழுவதும் உங்க ராசியின் மீது விழுகிறது. சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பணவருமானம் தேடி வரும். புகழும் கீர்த்தியும் செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் உங்களின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். 

கும்பம்:  நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகும் குருவினால் சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீடு நிலம் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். குருவின் பார்வையால் உங்களுக்கு சுப செலவுகள் ஏற்படும். சந்தோஷமும் சௌபாக்கியமும் பெருகும். வேலையில் தொழிலில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். 

மீனம்: மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகும் குருவினால் உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பண விசயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். யாரையும் நம்பி பணத்தை கொடுக்காதீர்கள். திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத சந்தோஷங்களும் சௌபாக்கியங்களும் தேடி வரும்.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow