ஏழைகளுக்கு சரியாக சிகிச்சை அளிப்பதில்லை - கைதான விக்னேஷின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி

என்னுடைய மகனுக்கும் இருதயம் சார்ந்த நோய் இருக்கிறது.

Nov 13, 2024 - 18:05
ஏழைகளுக்கு சரியாக சிகிச்சை அளிப்பதில்லை - கைதான விக்னேஷின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி

உடல்நிலை குறித்து மருத்துவர் பாலாஜியிடம் கேட்டபோது,அவர் தகாத வார்த்தையில் பேசி நீ மருத்துவரா...இல்லை நான் மருத்துவரா...என  கோபத்துடன் பேசினார் என மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷின் தாயார் பேட்டி அளித்துள்ளார்.

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பாலாஜி ஜெகநாதன் என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று மருத்துவர் பாலாஜியை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவி அனுமதிக்கப்பட்ட மருத்துவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கத்திக்குத்தில் பலத்த காயம் அடைந்த மருத்துவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன்  மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, வைகைச்செல்வன் உள்ளிட்டோர் நலம் விசாரித்தனர்.
 
இதைத்தொடர்ந்து மருத்துவர் மீதான தாக்குதல் சம்பவத்தின் போது பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கிண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷின் தாயார் பிரேமா பேட்டி அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, “ கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷின் தாயார் பிரேமா கடந்த வருடம் நவம்பர் மாதம் உடல் நரை சரியில்லாமல் பொத்தேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளித்தனர்.அப்பொழுது பரிசோதனை செய்ததில் உங்களுக்கு கேன்சர் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததன் பேரில், உடனடியாக அடையார் கேன்சர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 18 நாள் வைத்து இருந்து சிகிச்சை அளித்தனர்.

மேலும் அங்கிருந்து கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர் பாலாஜி சிகிச்சை அளித்தார். அங்கு போடப்பட்ட நான்கு ஊசிகளில் உடல் மீண்டும் அதிக பலவீனம் அடைந்து பரிசோதனை செய்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.அப்பொழுது மருத்துவர் பாலாஜியிடம் கேட்டபோது,அவர் தகாத வார்த்தையில் பேசி நீ மருத்துவரா...இல்லை நா மருத்துவரா...என்று கோபத்துடன் பேசினார்.

 மேலும் அங்கிருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் கொண்டு சென்ற அன்றைக்கு காலை முதல் மாலை வரை எந்த ஒரு சிகிச்சை அளிக்காமல் காக்க வைத்தனர் என்று விக்னேஷின் தாயார் கண்ணீர் மல்க கூறினார்.மேலும், ஓமந்தூரார் மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக மகன் விக்னேஷ் என்னுடன் இருந்து அனைத்து வேலைகளையும் செய்தார். என்னை பார்த்து அவர் விரக்தியில் காணப்பட்டார். அதேபோல என்னுடைய மகனுக்கும் இருதயம் சார்ந்த நோய் இருக்கிறது. அவனுக்கும் உடல்நிலை சரியில்லாதவன் என தெரிவித்தார். 

பிரேமா-மனோகரன் தம்பதியருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். முதல் மகன் விக்னேஷ் மற்றும் மேலும் 2 மகன் உள்ளனர். இதில் ஒருவர் ஆட்டோ ஓட்டுகிறார். மற்றொருவர் படிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow