மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை - அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குற்றச்சாட்டு

எதற்கெடுத்தாலும் அதிமுக ஆட்சியை சுட்டிக்காட்டி புள்ளி விவரங்களை மட்டுமே திமுக அமைச்சர்கள் சொல்வதாக குறைக்கூறுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குற்றம்சாட்டினர்.

Nov 13, 2024 - 16:21
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை - அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குற்றச்சாட்டு

தமிழக மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் இன்று கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜியை அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வைகை செல்வன், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் சந்தித்து உடல்நிலை குறித்து நலம் விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் விஜயபாஸ்கர்,  “சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு உதாரணமாக கிண்டி பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழகத்தில் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மீது தாக்குதல் சம்பவம் நடந்துவரும் நிலையில்,அதனை தடுப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.

மேலும், சுகாதாரத்துறை அமைச்சர் முதலமைச்சருடன் நடைபயிற்சி செல்லவே விரும்புவதாக குறை கூறிய அவர்கள், முதலமைச்சர் மா.சுப்ரமணியத்தை பதவி நீக்கம் செய்து சுகாதாரத்துறையை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தார். எதற்கெடுத்தாலும் அதிமுக ஆட்சியை சுட்டிக்காட்டி புள்ளி விவரங்களை மட்டுமே திமுக அமைச்சர்கள் சொல்வதாக குறை கூறிய அவர்கள், மக்களை பாதுகாக்க அரசு தவறி விட்டதாக குற்றம் சாட்டினர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow